லண்டனில் 3 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 6 பேர் பலி; 20 பேர் படுகாயம்
லண்டனில் பாதசாரிகளை இலக்கு வைத்து 3 இடங்களில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
லண்டன்: லண்டன் மாநகரில் பாதசாரிகளை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
லண்டன் நகரின் மத்திய பகுதியில் பாலம் ஒன்றில் நேற்று இரவு பாதசாரிகளை குறிவைத்து வாகனம் ஒன்று தாறுமாறாக பலமுறை மோதியது. இதில் பாதசாரிகள் பலரும் தூக்கியடிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பாரோ மார்க்கெட், வாக்ஸ்ஹால் பகுதிகளில் வேனில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவங்களில் இதுவரை மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
அத்துடன் இத்தாக்குதலை நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதியன்று வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தின் மீது மோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைப் போல மீண்டும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, இது ஒரு பயங்கரவாத தாக்குதலே என கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications