Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயங்கர சத்தம்..! மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் வீட்டின் முன் குண்டுவெடிப்பு.. யார் காரணம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டிலுள்ள மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் வீட்டின் அருகே சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் மூவர் உயிரிழந்தனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடல் வழியே மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதனால் மும்பை நகரமே போர்க்களமானது. இத்தாக்குதலில் பல காவலர்கள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்

இத்தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு புனேவில் அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்.

மூளையாகச் செயல்பட்டவர்

மூளையாகச் செயல்பட்டவர்

இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்களில் ஒருவர் ஜமாத்-உத்-தாவா (ஜூடி) அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத். கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர், பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த விவகாரத்தில் தற்போது 10 ஆண்டுகள் சிறையில் உள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஜவுஹர் நகரத்தில் உள்ள ஹபீஸ் சயீத் வீட்டின் அருகே இன்று பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

குண்டு வெடிப்பு

குண்டு வெடிப்பு

இந்த குண்டு வெடிப்பில் குறைந்தபட்சம் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 20 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹபீஸ் சயீத்தின் வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த குண்டு வெடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வீசாரணை தீவிரம்

வீசாரணை தீவிரம்

பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாதிகள் ஒழிப்பு படை இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனப் பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாண முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

சக்திவாய்ந்த வெடிகுண்டு

சக்திவாய்ந்த வெடிகுண்டு

இந்த வெடிகுண்டு மிகவும் சக்திவாய்ந்தது என்றும் இதன் காரணமாக அருகிலிருந்த பைக் மற்றும் ரிக்சா முற்றிலுமாக தேசமடைந்தது என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும், இதன் சத்தம் தொலைவில் கூட தெளிவாகக் கேட்டதாக போலீசார் குறிப்பிட்டனர். இவ்வளவு சக்திவாய்ந்த வெடிகுண்டைத் தயார் செய்தது யார், வெடிபொருட்கள் எப்படிக் கிடைத்தது என்பது குறித்து பயங்கரவாதிகள் ஒழிப்பு படை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+