காலையிலேயே குலுங்கிய இந்தோனேசியா.. பாலி கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 7.1 ரிக்டர் பதிவு
ஜாகர்த்தா: இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 7.1 ஆகவும் பதிவாகி உள்ளது.
இந்தோனிஷயாவின் மாதரத்திலிருந்து வடக்கே 201 கிலோமீட்டர் தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 518 கிலோமீட்டர் (322 மைல்) கீழேயும் இருந்ததாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா, பங்சல் அருகே நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அடியில் 525 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதாவது, மாதரத்திற்கு வடக்கே 203 கிமீ (126 மைல்) தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 516 கிமீ (320.63 மைல்) மிக ஆழமாகவும் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
எனினும், கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
சோஷியல் மீடியாவின் எக்ஸ்-ல் (ட்விட்டர்) சில பதிவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications