மாலத்தீவில் இன்று அதிபர் தேர்தல்.. முடிவுகளை உற்று நோக்கும் இந்தியா, சீனா! காரணம் இதுதான்
மாலத்தீவு: இந்திய பெருங்கடலில் இருக்கும் மாலத்தீவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிவுகளை இந்தியாவும், சீனாவும் உற்று நோக்கி வருகின்றன.
ஏற்கெனவே இலங்கையில் சீனாவின் கை ஓங்கி வருகிறது. இப்படி இருக்கையில் மாலத்தீவிலும் தற்போதைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் தோல்வியுற்றால் இந்திய பெருங்கடலில் இந்தியாவின் ஆதிக்கம் சரிவை காணும். எனவே வகையில் புவிசார் அரசியலில் மாலத்தீவு இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கிறது. மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவை பலப்படுத்த, ஏராளமான அளவில் இந்தியா இங்கு முதலீடு செய்திருக்கிறது. ஆனால் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் இங்கு அதிகரித்துள்ளன.

இச்சூழலில்தான் மாலத்தீவில் கடந்த 9ம் தேதியன்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. 5.21 லட்சம் பேர் வசிக்கும் இந்த தீவில் மொத்தம் 2,25,486 வாக்காளர்கள் வாக்களித்தனர். இதில் தற்போதைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் 39.05% வாக்குகளை பெற்றார். இவர் இந்தியா ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவராவார். பொருளாதாரம் மற்றும் ராணுவத் துறைகளில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறார்.
ஆனால் இவருக்கு எதிராக களத்தில் இருக்கும் மாலத்தீவு முன்னேற்றக் கட்சியின் வேட்பாளர் முய்ஜு 46.05% வாக்குகளை பெற்றார். இருப்பினும் யாரும் 50 சதவிகித வாக்குகளை பெறவில்லை என்பதால் இன்று மறு தேர்தல் நடைபெறுகிறது. முய்ஜு சீனா ஆதரவை கொண்டிருக்கிறார். வளர்ச்சிக்கும், பொருளாதார நிலைத்தன்மைக்கும் சீனாவின் ஆதரவு அவசியம் என்று இவர் கருதுகிறார். இப்படி இருக்கையில் இன்று நடைபெறும் தேர்தலில் யார் அதிகம் வாக்குகளை பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
சர்வதேச அளவில் தற்போது சீனா மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் செல்வாக்கு வேகமாக சரிந்து வருகிறது. எனவே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் கைகோர்த்திருக்கிறது. இது உலக நாடுகளை அமெரிக்கா ஆதரவு, சீன ஆதரவு என இரண்டாக பிரித்திருக்கிறது. இதேதான் தற்போது மாலத்தீவிலும் எதிரொலித்திருக்கிறது. மேற்குறிப்பிட்டபடி இன்று நடைபெறும் தேர்தல் இந்திய பெருங்கடலில் இந்தியாவின் ஆதிக்கத்தை மேலும் விரிவாக்குமா? அல்லது தற்போது நிலையிலேயே நீடிக்கும் என்பதற்கு பதிலை கொடுக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications