For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா புறப்பட்டார்!

By Mathi
Google Oneindia Tamil News

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் 5 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டம் வரும் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ள இன்று முற்பகல் புறப்பட்டுச் சென்றார்.

ஒபாமாவுடன் சந்திப்பு

ஒபாமாவுடன் சந்திப்பு

நாளை மறுநாள் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவர் சந்திக்கிறார்.

3வது முறை சந்திப்பு

3வது முறை சந்திப்பு

ஒபாமாவும் மன்மோகன்சிங்கும் மேற்கொள்ளும் 3வது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது,

இருவரும் பேசப் போவது எது?

இருவரும் பேசப் போவது எது?

இரு தலைவர்களும் ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்டவை குறித்து குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

ஆப்கான் விவகாரம்

ஆப்கான் விவகாரம்

ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆண்டு அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்படுவது குறித்தும் இருவரும் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

குடியேற்ற மசோதா

குடியேற்ற மசோதா

அதேபோல் அமெரிக்காவின் குடியேற்ற சீர்திருத்த மசோதாக்களால் இந்தியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் ஒபாமாவிடம் மன்மோகன்சிங் விவரிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

28-ல் மன்மோகன் உரை

28-ல் மன்மோகன் உரை

வரும் 28-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றுகிறார்.

நிரந்த உறுப்பினர் தகுதி

நிரந்த உறுப்பினர் தகுதி

மன்மோகன்சிங் தமது உரையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் தகுதி வேண்டும் என்று வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக், வங்கதேச பிரதமருடன் சந்திப்பு

பாக், வங்கதேச பிரதமருடன் சந்திப்பு

மேலும் இந்த கூட்டத்தின் போதே பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் வங்கசேத பிரதமர் ஷேக் ஹசினாவையும் பிரதமர் மன்மோகன்சிங் சந்திக்கக் கூடும்.

English summary
Prime Minister Manmohan Singh will on a five-day visit to the US on Wednesday during which he will hold summit talks with President Barack Obama as well as address the UN General Assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X