அசத்தல்.. பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த விருது.. அப்படியே நெகிழ்ந்து போன ஃபிஜி பிரதமர்
சுவா: இந்திய-பசிபிக் தீவுகள் மாநாட்டில் பங்கேற்க பசிபிக் தீவுகளுக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபிஜி நாட்டின் மிக உயரிய விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.
ஃபிஜி நாட்டின் பிரதமர் சிதிவேனி ரபுகாவால் இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பிஜியின் தோழமை விருது' எனப்படும் இந்த விருது அந்நாட்டின் மிகச்சிறந்த தலைவர்களுக்காக வழங்கப்பட்டு வரும் விருதாகும். அந்த வகையில் இது பிரதமர் மோடிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து செய்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, ஃபிஜி நாட்டிற்கு வந்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். இந்தியாவுக்கும் ஃபிஜி நாட்டுக்கும் இடையிலான உறவு காலத்தின் சோதனையாக உள்ளது என்று கூறியுள்ள அவர், இனி வரும் நாட்களில் இந்த உறவுகள் மேம்படுத்தப்படும். இரு நாடுகளும் இணைந்து பயணிக்கும் என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications