17 வயது சிறுமியுடன் உறவு வைத்துக் கொண்டேனா?.. நானா?.. அவரை பார்த்ததே இல்லை.. இளவரசர் ஆண்ட்ரூ!
லண்டன்: 18 வயது பூர்த்தியடையாத டீன்ஏஜ் பெண்ணுடன் நான் உறவு வைத்துக் கொண்டதே இல்லை என இளவரசர் ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து ராணி 2-ஆம் எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதியின் இளைய மகன்தான் ஆண்ட்ரூ (59). இவர் இளவரசர் சார்லஸுக்கு இளைய சகோதரன் ஆவார். இவர் கடந்த 1996-ஆம் ஆண்டு சாராவை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்துவிட்டார்.
இவரது நண்பர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். இவர் அமெரிக்காவில் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். மிகப் பெரிய பணக்காரர். இவர் அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் கிளிண்டன் ஆகியோருக்கும் நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

பலாத்காரம்
ஜெஃப்ரி மீது ஏராளமான பாலியல் புகார்கள் உள்ளன. இவர் கடந்த 6 மாதங்களுக்கு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் கரீபியன் தீவில் உள்ள தனது வீட்டில் சிறுமிகளை கடத்தி சென்று பலாத்காரம் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது.

இளவரசர் ஆண்ட்ரூ
இந்த வழக்கில் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெஃப்ரி ஆகஸ்ட் மாதம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் மீது பாலியல் புகார் கூறிய வெர்ஜினியா கியூப்ரே இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார்களை கூறியுள்ளார்.

ஜெஃப்ரி
இவர் கூறுகையில் ஜெஃப்ரி என்னுடன் பலமுறை உறவு வைத்துக் கொண்ட நிலையில் இளவரசர் ஆண்ட்ரூவும் என்னுடன் 3 முறை உறவு வைத்துக் கொள்ளுமாறு ஜெஃப்ரி கட்டாயப்படுத்தினார். அதோடு பல பணக்கார நண்பர்களுக்கும் என்னை பங்கு போட்டு கொடுத்தார்.

பெண்ணை சந்தித்ததே இல்லை
கடந்த 2001-ஆம் ஆண்டு அதாவது 17 வயதில் நான் ஆண்ட்ரூவுடன் உறவு வைத்து கொண்டேன். அதன் பின்னர் நியூயார்க் நகரிலும் கரீபியன் தீவிலும் உறவு வைத்துக் கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டேன் என்றார். இந்த நிலையில் இதுகுறித்து ஆண்ட்ரூ பேட்டி அளிக்கையில், இது போன்ற பெண்ணை நான் சந்தித்ததே இல்லை.

பார்ட்டிக்கு சென்றேன்
ஆனால் இந்த பெண், அதுவும் 17 வயதில் நான் உறவு வைத்து கொண்டேன் என கூறுகிறார். டீன் ஏஜ் பெண்ணிடம் நான் அது போல் நடந்து கொண்டதே இல்லை. அவர் சொல்லும் நேரத்தில் நான் என் குழந்தைகளை அழைத்து கொண்டு ஒரு பார்ட்டிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். அவர் என்னுடன் போஸ் கொடுக்கும் போட்டோவின் உண்மைத்தன்மை தெரியவில்லை என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications