இஸ்ரேலுக்கு வெளியே கால் வைத்தாலே நெதன்யாகு கைது? சர்வதேச நீதிமன்ற உத்தரவால் அடுத்து என்ன நடக்கும்?
ஆம்ஸ்டர்டாம்: காசாவில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே வெடித்த போர் ஓராண்டிற்கு மேலாகத் தொடர்கிறது. இந்தச் சூழலில்தான் கடந்த வியாழக்கிழமை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து நமக்கு மேஜர் கேள்வி எழும். அதாவது இஸ்ரேல் நாட்டை விட்டு வெளியே வந்தால் நெதன்யாகு கைது செய்யப்படுவாரா? என்பது தான் அது. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
கடந்தாண்டு இஸ்ரேல் ஹமாஸ் இடையே வெடித்த போர் ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்த போரால் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்னவே காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்கள் தான்.

இந்த போரில் பல அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தங்கள் இருப்பிடங்களை விட்டு பல லட்சம் பேர் வெளியேறினர். இதற்கிடையே இந்த போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் போர்க் குற்றங்கள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன.
பிடிவாரண்ட்: இது தொடர்பான வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கில் தான் கடந்த வியாழக்கிழமை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.. கொலை, துன்புறுத்தல் உள்ளிட்ட போர்க் குற்றங்களுக்காக பிடிவாரண்ட் பிறப்பிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட், ஹமாஸ் தலைவர் முகமது தியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரி ஆகியோருக்கு எதிராகவும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
சரி, இப்போது மேஜர் கேள்விக்கு வருவோம். இஸ்ரேல் நாட்டை விட்டு வெளியே வந்தால் நெதன்யாகு கைது செய்யப்படுவாரா? இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
விதி என்ன: இந்த சர்வதேச நீதிமன்றம் என்பது 1998இல் போடப்பட்ட ரோம் உடன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின்படி உறுப்பு நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த வேண்டும். இதனால் நெதன்யாகு எந்தவொரு உறுப்பு நாட்டிற்கு வந்தாலும் அவரை காவலில் வைக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. ஆனால், சர்வதேச நீதிமன்றத்தால் அதன் அதிகாரத்தை உறுப்பு நாடுகளின் மீது செயல்படுத்த முடியாது.
மேலும், சர்வதேச நீதிமன்றத்திற்கு எனத் தனியாக போலீஸ் அமைப்பு இல்லை. எனவே, நெதன்யாகுவை கைது செய்ய அவர்கள் ஐநா உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பை நம்பியிருக்க வேண்டும். அதாவது சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஐநா உறுப்பு நாடுகள் நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும் என்பதே விதி. ஆனால், அப்படி கைது செய்யவில்லை என்றாலும் சர்வதேச நீதிமன்றத்தால் எதுவும் செய்ய முடியாது.
வாய்ப்பில்லை: ஐநா சபையில் இருக்கும் பல உறுப்பு நாடுகள் இஸ்ரேலின் நட்பு நாடுகளாக உள்ளன. குறிப்பாகப் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் நெருங்கிய உறவைக் கொண்டு இருக்கிறது. இதனால் அந்த நாடுகள் நிச்சயம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய வாய்ப்பில்லை. அமெரிக்கா இந்த சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பு நாடு இல்லை. இதனால் அமெரிக்கா சென்றாலும் கைதாக வாய்ப்பில்லை.
கைது செய்யப்படுவார்: அதேநேரம் எல்லா நாடுகளும் கைது இதே நிலைப்பாட்டை எடுக்கவில்லை. தங்கள் நாட்டிற்கு நெதன்யாகு வந்தால் நிச்சயம் கைது செய்வோம் எனப் பல நாடுகள் சொல்லியுள்ளன. அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, கனடா, ஸ்பெயின் நாடுகள் நிச்சயம் கைது செய்வோம் எனக் கூறியுள்ளன. நார்வே, ஸ்வீடன், பெல்ஜியம், துருக்கி, சீனா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக மட்டும் கூறியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரை இந்த முடிவை வரவேற்பதாகக் கூறியுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை செயலாளர் ஜோசப் பொரெல் , "இது ஒரு அரசியல் முடிவு இல்லை.. இது ஒரு நீதிமன்றம்.. முறையாக விசாரணை நடத்தி இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். சர்வதேச நீதிமன்றத்தின் இந்த முடிவை மதிக்கிறோம். இதை நாங்கள் நிச்சயம் நடைமுறைப்படுத்துவோம்" என்று கூறியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications