மீண்டும் மன்னர் ஆட்சிதான் வேண்டும்.. நேபாளத்தில் வெடித்த போராட்டம்.. காத்மாண்டுவில் டென்ஷன்
காத்மாண்டு: நேபாள நாட்டில் மீண்டும் மன்னராட்சி கொண்டு வர வேண்டும் என்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் அந்த நாட்டில் கடந்த 2007-ஆம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அதன்பிறகு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று மக்களாட்சி நடைபெற்று வருகிறது. எனினும், அடிக்கடி அங்கு அரசியல் குழப்பம் ஏற்படுவதும் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடைபெற்று புதிய அரசு தேர்வு செய்யப்படுவதும் வழக்கமான ஒன்றாகும்.

இந்த நிலையில், நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கொண்டு வர வேண்டும் என தலைநகர் காத்மாண்டுவில் போராட்டம் வெடித்தது. நுற்றுக்கணக்கானர்வர்கள் திரண்டு குடியரசு ஆட்சியை ஒழிக்த்துவிட்டு மன்னராட்சி நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். நேபாள தேசியக் கொடியை ஏந்தியபடி முன்னாள் மன்னருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பிய போராட்டகாரர்கள் காத்மாண்டு நகரின் மையப் பகுதி நோக்கி செல்ல முற்பட்டனர்.
5 போலீசார் காயம்: எனினும் கலவர தடுப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களைக் கொண்டு போலீசாரை தாக்கினர். பதிலுக்கு போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரக்ளை கட்டுப்படுத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
இதில் ஐந்து போலீசார் உள்பட 30 பேர் காயம் அடைந்துள்ளனர். மீண்டும் போராட்டம் வெடிக்காமல் இருக்க தலைநகர் காத்மாண்டுவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போராடத்தை முன்னின்று நடத்திய தொழில் அதிபர் துர்கா பிரசாய் என்பவரின் வீட்டு முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பிரதமர், குடியரசு தலைவர் வீடுகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஞானேந்திராவிற்கு மக்கள் ஆதரவு: நாடு முழுவதிலும் இருந்து காத்மாண்டுவிற்கு மன்னராட்சிக்கு ஆதரவானவர்கள் வந்தனர். நேபாளத்தில் அரசும் அரசியல் கட்சிகளும் ஊழலில் திளைத்து வருவதாகவும் நிர்வாகம் செய்வதில் தோல்வி அடைந்து இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டு மன்னராட்சிக்கு எதிராக கடுமையான போராட்டம் வெடித்ததால், அப்போதைய நேபாள மன்னர் ஞானந்திரா, தனது அதிகாரத்தை விட்டு கொடுத்து ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தினார்.
அதன்பிறகு நேபாளத்தில் புதிதாக அமைந்த ஜனநாயக அரசு, மன்னராட்சி முறையை ஒழித்து விட்டு நேபாளத்தை குடியரசு நாடாகவும் நாட்டின் தலைவர் குடியரசு தலைவர் என்றும் அறிவித்தது. அதன்பிறகு மன்னராக இருந்த ஞானேந்திராவிற்கு இருந்த சிறப்பு சலுகைகள் அனைத்து பறி போயின. எனினும் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications