மிஸ் இன்டர்நேஷனல் 2014 அழகியாக பியூர்டாரிகோ அழகி வலரி ஹெர்னாண்டஸ் தேர்வு
டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோ நகரில் நடந்த மிஸ் இன்டர்நேஷனல் 2014 அழகிப் போட்டியில் பியூர்டாரிகோ நாட்டைச் சேர்ந்த அழகி வலரி ஹெர்னாண்டஸ் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.
21 வயதான இவர் பியூர்டாரிகோவின் கரோலினா நகரைச் சேர்ந்தவர் மாடல் அழகியாக திகழும் இவர் மாணவி ஆவார். நேற்று நடந்த இறுதிச் சுற்றுப் போட்டியில் வலரி வெற்றி பெற்றார்.
இது 54வது மிஸ் இன்டர்நேஷனல் அழகிப் போட்டியாகும். டோக்கியோவின் கிராண்ட் பிரின்ஸ் ஹோட்டலில் அழகிப் போட்டி நடந்தது.

தங்கத் தேவதை...
தங்க இழைகளால் ஆன வெள்ளுடையில் தேவதை போல ஜொலித்த வலரி, தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் வழக்கமாக அழகிகள் அழுவதைப் போல அழுதார். பின்னர் உற்சாகத்தில் குரல் எழுப்பினார்.

மகுடம்...
அவருக்கு 2013ம் ஆண்டு பட்டம் வென்றவரான பிலிப்பைன்ஸ் அழகி மகுடத்தைச் சூட்டினார்.

பெரும் பொறுப்பு...
வெற்றி பெற்றதும் வலரி கூறுகையில், இதை நான் பட்டமாக மட்டும் நினைக்கவில்லை. மாறாக பெரும் பொறுப்பாக கருதுகிறேன் என்று கூறினார்.

ரன்னர்...
இந்த அழகிப் போட்டியில் முதல் ரன்னர் அப்பாக கொலம்பிய அழகி ஜூலேகா சுவாரஸ், 2வது ரன்னர் அப்பாக தாய்லாந்தின் புனிகா குல்சூன்டோர்னட், 3வது ரன்னர் அப்பாக இங்கிலாந்தின் விக்டோரியா டூபி, 4வது ரன்னர் அப்பாக பின்லாந்தின் மில்லா ரோம்ப்பானன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அன்பு, அமைதி தழைக்க...
வலரி மேலும் கூறுகையில், இன்டர்நேஷனல் அழகியாக, உலகம் முழுவதும் அன்பு, அமைதி, ஒற்றுமை தழைக்கப் பாடுபடுவேன் என்றார்.

மிஸ் இன்டர்நேஷனல்...
உலக அளவில் உள்ள முக்கியமான மிஸ் வேர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் மற்றும் மிஸ் சூப்பர்நஷனல் போட்டிகளுடன் இந்த மிஸ் இன்டர்நேஷனல் அழகிப் போட்டியும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில்...
1960ம் ஆண்டு இது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது பின்னர் 1968ம் ஆண்டு முதல் ஜப்பானில் இது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications