Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாய்சனில் இருந்து தப்பிய நவல்னி! சிறையில் மர்ம மரணம்.. உண்மை காரணம் இதுதான்! ஆனா உடலுக்கு என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி ஜெயிலில் உயிரிழந்த நிலையில், அவர் மரணத்திற்கான காரணம் குறித்து இப்போது சிறை நிர்வாகம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

ரஷ்யாவில் சர்வ வல்லமை பெற்ற தலைவராக இருப்பவர் புதின்.. அவரை எதிர்த்துப் பேசும் நபர்களுக்கு யாராக இருந்தாலும் காலி செய்துவிடுவார். ஆனால், அதை எல்லாம் தாண்டி ரஷ்யாவில் புதினை எதிர்த்து வந்தவர் அலெக்ஸி நவல்னி.

Putin critic Alexei Navalny Died Due to Sudden Death Syndrome What is it

புதினின் சொகுசு வாழ்க்கை, செல்வம் குறித்து நக்கலடிக்கும் வகையிலான வீடியோக்களை வெளியிட்டு வந்தார் அலெக்ஸி நவல்னி.. இதன் காரணமாகவே ரஷ்யாவில் அவருக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்தது.

நவல்னி: இதனால் அவரையும் ஒழித்துக்கட்ட பல்வேறு முயற்சி எடுக்கப்பட்டது. அலெக்ஸி நவல்னி மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், ஒரு சமயம் அவரை கொலை செய்யவும் கூட முயற்சி நடந்தது. இருப்பினும், அவை அனைத்தில் இருந்தும் நவல்னி தப்பினார். விஷம் வைத்த போது நவல்னி உடல்நிலை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அவருக்கு ஜெர்மனியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டே அவர் காப்பாற்றப்பட்டார்.

அதன் பிறகு அவர் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துணிச்சலாக அவர் ரஷ்யா திரும்புவதாக அறிவித்தார். அதன்படி ரஷ்யாவுக்கு வந்து இறங்கிய உடனேயே அவர் கைது செய்யப்பட்டார். பல குற்றச்சாட்டுகளில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்தாலும் என்றாவது ஒரு நாள் அவர் வெளியே வந்து நாட்டை வழிநடத்துவார் என்றே அவரது ஆதரவாளர்கள் நம்பி இருந்தனர்.

என்ன காரணம்: ஆனால், அது நடக்காமலேயே போய்விட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இவர் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். நவல்னி மரணத்திற்கு புதின் தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். அமெரிக்க அதிபர் பைடன் கூட வெளிப்படையாக இதைக் கூறியிருந்தார். இதற்கிடையே அலெக்ஸி நவல்னி மரணம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. Sudden Death Syndrome என்ற பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

47 வயதான அலெக்ஸி நவல்னி Sudden Death Syndrome காரணமாக உயிரிழந்ததாக அவரது தாயாரிடம் தெரிவிக்கப்பட்டது.. மேலும், விசாரணை முடியும் வரை நவல்னியின் உடல் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்று அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்த சின்டோரம் என்பது மரணத்தை ஏற்படுத்தும் பலவகை திடீர் மாரடைப்பைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். அதாவது திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.

உடல் எங்கே: மேலும், நவல்னியின் உடல் இதுவரை எங்கே இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அவரது குழுவினர் தெரிவித்தனர். சிறை வளாகத்திற்கு அருகிலுள்ள நகரமான சலேகார்டுக்கு நவல்னி உடல் கொண்டு செல்லப்பட்டதாக அவரது தாயிடம் கூறப்பட்டது. அதேநேரம் அவர்களின் தாயார் அங்குள்ள மருத்துவமனைக்குச் சென்ற போது அங்கே அவரை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நவல்னியின் வழக்கறிஞர் தொடர்பு கொண்டபோதும் ​மருத்துவமனையில் நவல்னியின் உடல் இல்லை என்றே கூறியுள்ளனர். நவல்னி மரணம் தொடர்பாக ரஷ்யா சிறை நிர்வாகம் விசாரணை நடத்திஎம வரும் நிலையில், அந்த விசாரணை முழுமையாக முடியும் வரை உடலை ஒப்படைக்க முடியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+