கொல்லப்பட்ட பாக். மாடல் அழகியின் 3 கணவர்களும் அதிர்ச்சியில்!
பெஷாவர்: பாகிஸ்தானில் சொந்த அண்ணனாலேயே கொல்லப்பட்ட மாடல் அழகியும், சர்ச்சைக்குரியவருமான குவான்டீல் பலூச்சின் 3 கணவர்களும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
ஆனால் இந்த மூன்று பேரையும் பலூச் ரொம்ப காலத்திற்கு முன்பே விவாகரத்து செய்து விட்டார். பலூச் உயிருடன் இருந்தபோது அவரது செயல்பாடுகள், போக்கு குறித்து இந்த மூன்று பேரும் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். ஆனால் தற்போது அவரது துயர முடிவால் மூன்று பேருமே வருத்தம் அடைந்துள்ளனராம்.

பலூச் 15 வருடங்களுக்கு முன்பு முதல் திருமணம் செய்தார். ஆனால் அது நிலைக்கவில்லை. கணவரைப் பிரிந்த அவர் 2வதாக டெய்லர் கடை நடத்தி வரும் பெஷாவரைச் சேர்ந்த ஷாஹித் பலூச் என்பவரைத் திருமணம் செய்தார். 13 வருடங்களுக்கு முன்பு இந்தத் திருமணம் நடந்தது. தனது வீட்டினரின் அனுமதி இல்லாமல் இந்தத் திருமண பந்தத்தில் நுழைந்தார் குவான்டீல்.
பின்னர் ஷாஹித்தை பிரிந்தார். அதன் பிறகு 2008ம் ஆண்டு முசாபர்கர் பகுதியைச் சேர்ந்த ஆசிக் ஹுசேன் என்பவரைத் திருமணம் செய்தார். இதுவும் நீடிக்கவில்லை. 2010ல் பிரிந்து விட்டனர்.
இப்படி அடுத்தடுத்து 3 திருமணங்களை முடித்துக் கொண்ட நிலையில்தான் சர்ச்சைக்குரிய பதிவுகளை பேஸ்புக்கில் போட ஆரம்பித்தார் குவான்டீல் பலூச். கடைசியில் அது அவரது உயிருக்கே உலை வைத்து விட்டது.
குவான்டீல் பலூச்சின் துயர முடிவு குறித்து 3 மாஜி கணவர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதை கிட்டத்தட்ட நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் சொந்த அண்ணனே செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications