அமெரிக்க பறவைகள் சரணாலயத்தில் அபூர்வ ஆந்தை திருட்டு: மதிப்பு சுமார் ரூ2.5 லட்சம்
வாஷிங்டன்: அமெரிக்க பறவைகள் சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள அபூர்வ வகை ஆந்தை ஒன்றை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள 'யாக்கிமா' மாகாணத்தில் உள்ளது ரேப்டர் ஹவுஸ் பறவைகள் சரணாலயம். இங்கு பல அபூர்வ பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சரணாலயத்தில் இருந்து அபூர்வ வகை ஆந்தை ஒன்று கடந்த வாரம் திருடப்பட்டுள்ளதாக சரணாலய நிர்வாகி உறுதி செய்துள்ளார்.
திருடர்கள் ஆந்தையைக் குறி வைத்து திருடியுள்ளார்கள் எனவும், அதன் அருகிலிருந்த மற்ற அரிய பறவைகள் திருடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருடப்பட்ட இந்த ஆந்தையானது கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் அபாயம் இருப்பதாகத் தெரிகிறது.

அபூர்வ வகை ஆந்தை...
திருடு போன ஆந்தை 'யூரேசியன் டானி' வகையைச் சேர்ந்த 'ஷொ்மன்' எனும் அபூர்வ ரக ஆந்தை ஆகும்.

ஆந்தை மாயம்...
வழக்கமாக சரணாலயத்தை நடத்தி வரும் ஷெனான் மற்றும் அவரது மனைவி மார்ஷா இருவரும் அருகிலுள்ள பள்ளிகளில் மாணவர்களிடம் பறவைகள் பற்றி பாடம் நடத்துவதற்கு இந்த அபூர்வ ஆந்தையை கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சரணாலயத்திற்கு சென்று பார்த்த போது கூண்டிற்குள் ஆந்தையை காணவில்லையாம்.

கள்ளச்சந்தையில்....
இதுகுறித்து ஷெனான் கூறும்போது, ‘நாங்கள் இந்த ஆந்தையை செயின்ட் லூயிஸ் சரணாலயத்திலிருந்து கொண்டு வந்தோம். 'ஷொ்மன்' அபூர்வ ரக ஆந்தை கள்ளச் சந்தையில் சுமார் 4000 டாலர்கள் (இரண்டரை லட்சம் ரூபாய்) வரை விற்கப்படலாம்.

வேட்டையாட தெரியாது...
14 ஆண்டுகள் கூண்டிற்குள்ளேயே இருந்ததால் திருடப்பட்ட ஆந்தைக்கு வேட்டையாடக் கூட தெரியாது" எனறு வருத்தத்துடன் ஷெனாய் தெரிவித்துள்ளார்.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications