ஈரான் மீது சர்ப்ரைஸ் அட்டாக்.. டிரம்ப் போடும் திட்டம் இதுதான்.. உண்மையை உடைக்கும் கலிபாஃப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போர் நிறுத்தத்தை காலவரையற்ற வரையில் நீட்டிக்க உள்ளதாக அறிவித்துள்ளர். பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் கோரிக்கையை ஏற்று எடுக்கப்பட்ட இந்த முடிவு, ஈரான் அரசை ஒரு "ஒருங்கிணைந்த திட்டத்தை" (unified proposal) சமர்ப்பிக்கும் வரை நீடிக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த இடைப்பட்ட காலத்தில், அமெரிக்க ராணுவம் ஈரான் துறைமுகங்களுக்கு விதித்த கடற்படைத் முடக்கத்தை தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதனால் ஈரானுக்கு தினமும் 500 மில்லியன் டாலர் அளவிலான வர்த்தக பாதிப்பு ஏற்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரின் ஆலோசகரும், முக்கிய பேச்சுவார்த்தை நிபுணருமான முகமது பாகர் கலிபாஃப், டிரம்பின் போர் நிறுத்த நீட்டிப்பை "நேரத்தை வாங்கும் தந்திரம்" என்று விமர்சித்துள்ளார். அமெரிக்கா ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்துவதற்காக நேரத்தை எடுத்துக்கொள்ளும் தந்திரம் என கலிபாஃப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க கடற்படையின் முடக்கத்தை எடுக்காமல் ஈரான் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வராது என அறிவித்த நிலையில், ஜேடி வேன்ஸ் நேற்றைய பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தார். இதனால் பதற்றம் அதிகமான நிலையில் பாகிஸ்தான் பீல்டு மார்ஷல் அசிம் முனிர் மற்றும் பாக். பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆகியோர் டிரம்ப்-யிடம் போர் நிறுதத்தை நீட்டிக்க வலியுறுத்தினர். இதை தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையற்ற காலத்திற்கு நீட்டிக்க உள்ளதாக அறிவித்தார்.
இந்த போர் நிறுத்தத்தை "அமெரிக்க கடற்படை முடக்கம் தொடர்வது குண்டு வீச்சுக்கு சமம். இதற்கு ராணுவ பதிலடி தரப்பட வேண்டும்" என்றும் முகமது பாகர் கலிபாஃப் X-ல் பதிவிட்டுள்ளார். ஈரான் தரப்பு, அமெரிக்கா இன்னும் தாக்குதல் திட்டத்தில் இருப்பதாக சந்தேகம் கொண்டுள்ளது என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த போர் நிறுத்த நீட்டிப்பு, மத்திய கிழக்கில் அமைதி நிலைக்க வாய்ப்பை உருவாக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. ஆனால் அமெரிக்க கடற்படை முடக்கம் தொடர்வதால், ஹார்முஸ் நீரிணை பாதையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும். இது எண்ணெய் விலை உயர்வு, சரக்கு போக்குவரத்து, வளைகுடா நாடுகளில் உணவு பற்றாக்குறை உள்ளிட்டவற்றை ஏற்படுத்தலாம். இந்தியா உட்பட பல நாடுகளின் பொருளாதாரத்தையும் இந்த நிலைப்பாடு பெரிய அளவில் பாதிக்கும்.
இதேவேளையில் அமெரிக்காவின் வளைகுடா நாடுகளுக்கான மாற்று சப்ளையர் இல்லாத காரணத்தால் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவும் (குறிப்பாக வெனிசுலா எண்ணெய்) இது பெரும் வாய்ப்பாக உருவாகியுள்ளது. விரைவில் அமெரிக்கா பெரிய அளவில் வெனிசுலா கச்சா எண்ணெய்யை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விற்பனை செய்ய துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கொத்தடிமை முறையை ஒழிக்க இந்தியா தவறிவிட்டதாம்.. கூடுதல் வரிக்கு காரணம் சொல்லும் டிரம்ப்! -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications