வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் அனைவரும் சாதிக்கிறார்கள் என்பது மாயை: முன்னாள் பிஜி பிரதமர்
சிட்னி: வெளிநாட்டில் வாழும் எல்லா இந்தியர்களும் சாதிக்கிறார்கள் என்ற மாயை வேண்டாம். பெரும்பான்மையானவர்களின் நிலைமை துயரமானதாகவே உள்ளது எனத் தெரிவித்துள்ளார் பிஜி முன்னாள் பிரதமரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான மகேந்திர பி. சவுத்ரி.
பிஜி நாட்டு லேபர் கட்சியைச் சேர்ந்தவரான சவுத்ரி, 1999 மே மாதம் பிரதமர் பதவியேற்றார். இதன் மூலம் முதல் இந்திய வம்சாவளி தலைவர் என்ற பெருமையைப் பெற்ற சவுத்ரி, பதவியேற்ற ஒரு ஆண்டில் பிணைக் கைதியாக வைக்கப் பட்டார். அதன் பின்னர் சவுத்ரி அரசை அதிபர் கலைத்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் மண்டல மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டை வெளிநாடுவாழ் இந்தியர்கள் நலத் துறை அமைச்சர் வயலார் ரவி மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் பேரி ஓ பாரல் ஆகியோர் குத்து விளக்கேற்றி மாநாட்டைத் தொடங்கி வைத்தனர்.
அப்போது விழாவில் பேசிய சவுத்ரி, ‘வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் எல்லா துறைகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்கிறார்கள் என்கிற மாயை வேண்டாம்' என அறிவுறுத்தினார்
மேலும், இது குறித்து அவர் பேசியதாவது....
மாயை...
வெளிநாடுகளில் ஆங்காங்கே வசிக்கும் இந்தியர்களை ஒரே தன்மை மிக்கவர்களாக கருதி விடமுடியாது. சில துறைகளில் இந்தியர்கள் மிளிர் கிறார்கள், சாதனை படைக்கிறார்கள் என்பதை வைத்து எங்கும் இதே நிலைமை என்கிற மாயை வேண்டாம்.
உலக நாடுகளின் கவனம்...
சிட்டினியில் நடைபெறும் வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடு நல்லதொரு வாய்ப்பாகும். இந்த பிராந்தியத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களை இணைக்க இது உதவும். ஆசிய பசிபிக் பகுதியில் பலம் பொருந்திய நாடாக விளங்கும் இந்தியாவின் அணி சேரா கொள்கை, ஜனநாயக ஆட்சி முறை, சுதந்திரம், மனித மாண்புக்கு முக்கியத்துவம் தரும் அதன் கொள்கை ஆகியவை உலக நாடுகளின் கவனத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
சுதந்திரத்திற்கு முன்பே...
பிஜி மக்கள் தொகை 10 லட்சத் துக்கும் குறைவாகவே உள்ளது. ஆனால் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கையோ சுமார் 2.5 கோடி. சுதந்திரம் பெறுவதற்கு முன்பே ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் வேலை தேடி இந்தியாவை விட்டு வந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
உரிமைகளும் முக்கியம்....
வர்த்தகம், வணிகம் முதலீடு ஆகி யவை முக்கியமானவை என்பதில் சந்தேகம் இல்லை. அதேவேளை யில் மனித மாண்புகள், கண்ணியம், இந்திய வம்சாவளி நபர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தருவது அவசியம்.
ஆதரவு வேண்டும்....
பிஜியில் ஒப்பந்தத் தொழிலாளர்க ளாக வந்தவர்களின் நலன் மீது அதிக ஈடுபாடு காட்டினார் மகாத்மா காந்தி. மனித உரிமைகள் மீது மகாத்மா காந்தி அப்போது காட்டிய ஈடுபாடும், விருப்பமும் இன்றைக்கும் அவசிய மாகும். ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ள இந்திய சமூகத்தவர் அங்கீகாரமும் நியாயமும் கேட்டு நடத்திவரும் போராட்டத்துக்கு வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் தார்மிக ஆதரவு தரவேண்டும்.
அங்கீகாரம் வேண்டிப் போராட்டம்.....
இந்தியாவை விட்டு வெளியேறி வெளி நாடுகளில் வசிப்போரில் பெரும்பான்மையானவர்களின் நிலைமை துயரகரமாகவே உள்ளது. . தாம் சென்ற பூமியில் தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வும் அதனுடன் தங்களை ஐக்கியப் படுத்திக்கொள்ளவும் அவர்கள் போராடுவது வேதனையானது.
கவனம் தேவை....
மனித உரிமை சார்ந்த இந்த விவகாரங்கள் மீது இந்தியா கவனம் செலுத்துவது அவசியம் என்றார் சவுத்ரி.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்....
இந்த மாநாட்டில், ஆஸ்திரேலியாவின் அனைத்து மாகாணங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், ஹாங்காங், பப்புவா நியூ கினி, நியூசிலாந்து, பிஜி மற்றும் பசிபிக் தீவுகள் உள்ளிட்ட பக்கத்து நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications