மலேசிய விமானம் மாயமாகி 6 மாதம்: இன்னும் அதிசயத்தை எதிர்பார்க்கும் சீனர்கள்
பெய்ஜிங்: மலேசிய விமானம் எம்.ஹெச். 370 மாயமாகி 6 மாதம் ஆகியதையொட்டி சீன பயணிகளின் உறவினர்கள் புத்த கோவில்களில் இன்று பிரார்த்தனை செய்தனர்.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசிய விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. செயற்கைக்கோள் தகவலின்படி விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணி மாதக்கணக்கில் நடந்து வருகிறது.

6 மாதங்கள்
விமானம் மாயமாகி 6 மாதங்கள் ஆனதையொட்டி அதில் பயணம் செய்த சீனர்களின் உறவினர்கள் பெய்ஜிங்கில் உள்ள பிரபல புத்த கோவில்களில் கூடி இன்று பிரார்த்தனை செய்தனர்.

விரட்டிய போலீசார்
பிரார்த்தனையின்போது ஒருவர் கவிதை வாசிக்க சிலர் அதை கேட்டு அழுதனர். அப்போது அவர்களை அங்கிருந்து செல்லுமாறு போலீசார் விரட்டவே அவர்கள் கோபம் அடைந்தனர்.

அதிசயம்
விமானம் மாயமாகி ஆறு மாதங்கள் ஆன போதிலும் தங்களின் உறவினர்கள் உயிரோடு வரும் அதிசயம் நடக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் சீன மக்கள்.

இந்திய பெருங்கடல்
இந்திய பெருங்கடலுக்கு அடியில் 60 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதியில் விமானத்தை தேட சர்வதேச குழுக்கள் தயாராகி வருகின்றன. இம்முறை நிச்சயம் விமானத்தின் பாகங்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications