கறுப்புப் பணத்தை மீட்க ஒத்துழைக்க வேண்டும்: 'பிரிக்ஸ்' தலைவர்களுக்கு மோடி வேண்டுகோள்!
பிரிஸ்பேன்: வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்பது முதன்மையான முன்னுரிமை. இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி மியான்மர் நாட்டில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு நேற்று சென்றார். ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அவரது முதல் நிகழ்ச்சியாக நேற்று அங்குள்ள குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அதனைத் தொடர்ந்து இன்று தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
முனந்தாக பிரிக்ஸ் நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்யா அதிபர் விளாடிமீர் புதின், தென் ஆப்பிரிக்கா அதிபர் ஜோக்கப் ஜூம்மா மற்றும் பிரேசில் அதிபர் டில்மா ரூசோப் கலந்துக் கொண்டனர்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பிரிக்ஸ் நாடுகள் உருவாக்கிய வங்கியானது விரைந்து செயல்பட வேண்டும் என்பதில் இந்தியா ஆர்வம் கொண்டுள்ளது. இந்த வங்கியானது வரும் 2016ஆம் ஆண்டு முதல் செயல்பட வேண்டும்.

பிரிக்ஸ் வங்கிக்கான பிரதிநிதியை இந்திய அரசு விரைவில் அறிவிக்கும். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணங்களை மீட்பது நம்முடைய முக்கிய முன்னுரிமை.
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பணங்களை மீட்கும் விவகாரத்தில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கணக்கில் வராத பணம் பாதுகாப்பு சவால்களுடன் தொடர்பு கொண்டது. வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்கும் பணியில் இந்தியா ஏற்கனவே இறங்கிவிட்டது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இம்மாநாட்டைத் தொடர்ந்து ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications