கவுண்டமணி ரேஞ்சுக்கு அவசரப்பட்டு முடிவெடுத்த நிருபர்.. கடைசில எப்டி பல்பு வாங்கியிருக்கார் பாருங்க!
மெட்ரிட்: ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நிருபர் ஒருவர் லாட்டரி அடித்ததாக நினைத்து நேரலையிலேயே தனது வேலையை ராஜினாமா செய்து ஏமாந்து போனச் சம்பவம் நடந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் நடாலியா இகுடெரோ. இவர் அந்நாட்டின் தொலைக்காட்சி ஒன்றில் நிருபராக வேலை பார்த்து வருகிறார். நடாலியா சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கினார்.
கடந்த 22ம் தேதி நடாலியா வாங்கிய லாட்டரியின் குலுக்கல் நடைபெற்றது. அதனை தொலைக்காட்சிக்காக அவர் நேரலையில் செய்தி அறிவித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்ததாக அறிவிக்கப்பட்டது.

லைவ்விலேயே ராஜினாமா
இதனால் உற்சாகமடைந்த நடாலியா, கேரமா ஓடிக்கொண்டிருந்த போதே துள்ளி குதித்து தனது குதூகலத்தை வெளிப்படுத்தினார். அதோடு நில்லாமல், இனி தான் நிருபராக வேலை பார்க்க போவதில்லை என நேரலையிலேயே தனது ராஜினாமாவை அறிவித்தார்.

அப்செட்
ஆனால் அவரது துரதிர்ஷ்டம் நடாலியாவுக்கு முதல் பரிசு விழவில்லை. அவருக்கு லாட்டரியில் கிடைத்தது வெறும் ரூ,3,95,195 மட்டுமே. இதனை அறிந்த அவர் நொடி பொழுதில் தனது சந்தோஷத்தை எல்லாம் இழுந்து அப்செட் ஆனார்.

ஆதரவு
பின்னர் தனது வேலையை ராஜினாமா செய்தது குறித்து டிவிட்டரில் வருத்தம் தெரிவித்தார். நெட்டிசன்கள் பலரும் நடாலியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். யாராக இருந்தாலும் இப்படி தான் செய்திருப்பார்கள் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
|
வைரல் வீடியோ
நடாலியா நேரலையில் வேலையை ராஜினாமா செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை இதுவரை 23 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 13700 பேர் லைக் செய்துள்ளதோடு, ஐந்தாயிரம் ரீடிவீட்டுகளும் செய்யப்பட்டுள்ளன.

சேதுபதி ஐபிஎஸ் காமெடி
இந்த சம்பவம் சேதுபதி ஐபிஎஸ் பட காமெடியைத்தான் நமக்கு ஞாபகப் படுத்துகிறது. அப்படத்தில் இப்படித்தான் கப்பலில் வேலை கிடைத்து விட்டதாகக் கருதி அவசரப்பட்டு தனது வேலையை ராஜினாமா செய்து விடுவார் கவுண்டமணி. பிறகு அவர் படும் பாடுகளைப் பார்த்து நமது வயிறு புண்ணானது நினைவிருக்கலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications