இருண்ட உலகம் வடகொரியா.. குழந்தைகளுக்கு தொடரும் மரண தண்டனை! என்ன காரணம்! கொடூரத்தின் உச்சத்தில் கிம்
பியோங்யாங்: வடகொரியாவில் அதிபராக கிம் ஜாங் உன் இருக்கும் நிலையில், அங்குச் சர்வாதிகார ஆட்சியே நடக்கிறது. அங்கு மிகவும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தென் கொரிய நாடகங்களைப் பார்த்ததற்காக 30 குழந்தைகளுக்கு வட கொரியா மரண தண்டனை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிம் ஜாங் ஏன் இதுபோன்ற கடுமையான தண்டனைகளை வழங்குகிறார் என்பது குறித்து நாம் பார்க்காலம்.
உலகில் இன்னும் சர்வாதிகாரம் இருக்கும் ஒரு சில நாடுகளில் ஒன்று வடகொரியா.. அங்கு கிம் ஜாங் உன் அதிபராக இருந்து வருகிறார். முதலில் அவரது தந்தை அதிபராக இருந்த நிலையில், இப்போது கிம் ஜாங் அதிபராக இருக்கிறார்.

உலகின் மற்ற நாடுகளுக்கும் வடகொரியாவுக்கும் எந்தவொரு தொடர்பும் இருப்பதில்லை. இதனால் உலகின் மற்ற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பது வடகொரிய மக்களுக்குத் தெரியாது. ஊடகம் தொடங்கி அனைத்திற்கும் வடகொரியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
30 குழந்தைகளுக்கு மரண தண்டனை: இதற்கிடையே தென் கொரிய நாடகங்களைப் பார்த்ததற்காக 30 குழந்தைகளுக்கு வட கொரியா மரண தண்டனை விதித்துள்ளதாகத் தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரியா அதன் தொழில்நுட்ப வளர்ச்சியாகப் புகழ்பெற்று இருக்கும் சூழலில், மறுபுறம் வடகொரியச் சர்வாதிகார நாடாகத் தொடர்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரியாவை முக்கிய எதிரியாக அறிவித்தார். அந்தளவுக்கு தென்கொரியா மீது வடகொரியாவுக்கு கடும் கோபம் இருக்கிறது. இதனால் தென்கொரியாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை வடகொரியா தொடர்ந்து எடுத்து வருகிறது. தென்கொரியா தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் வடகொரியா தடையும் விதித்துள்ளன.
தென்கொரிய சீரியல்கள்: குறிப்பாகத் தென் கொரிய சீரியல்களை கூட பார்க்கக் கூடாது என்று வட கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கே-டிராமாக்கள் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சிகள் வட கொரியாவில் ஒளிபரப்பப்படுவதில்லை.. ஆனால் அதையும் தாண்டி இந்த சீரியல்கள் பென் டிரைவ்கள் மூலம் வடகொரியாவுக்குள் கடத்தப்படுகிறதாம். இதை வடகொரியாவில் உள்ள டீன் ஏஜ் பருவத்தினர் அதிகம் பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
மரண தண்டனை: இதற்கிடையே தடைசெய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்தாக பிடிபட்ட 30 நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வட கொரிய அதிகாரிகள் மரண தண்டனை விதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தென் கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சக அதிகாரி கூறுகையில், "30 பேருக்கு அவர்கள் மரண தண்டனை விதித்துள்ளனர். இதை ஏற்கவே முடியாது. 3 சட்டங்களின் அடிப்படையில் இந்த மரண தண்டனை விதித்துள்ளனர்" என்றார்.
சிறிய தவறுகளுக்கே இதுபோல மரண தண்டனை விதிக்கப்படுவது வடகொரியாவில் இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களிலும் பல முறை டிவி பார்த்ததற்கு எல்லாம் கூட வடகொரிய இளைஞர்களுக்கு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடுமையான தண்டனை: கடந்த சில காலங்களாகவே வடகொரிய அரசு தண்டனைகளைக் கடுமையாக்கி வருகிறது. இதற்கு முன்பு தவறு செய்து மாட்டும் இளைஞர்கள் சிறைகளுக்குப் பதிலாகத் தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள். அவர்களின் தண்டனை ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவாக இருக்கும். ஆனால், இப்போது 12 ஆண்டுகள் சிறை முதல் மரண தண்டனைகள் வரை விதிக்கப்படும் போக்குகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
என்ன காரணம்: பலத்த கட்டுப்பாடுகளையும் தாண்டி இப்போது உலகின் மற்ற பகுதிகளில் நடக்கும் விஷயங்கள் குறித்து வடகொரிய மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. மக்கள் என்ன நடந்தாலும் தனக்கு எதிராகத் திரண்டு விடக்கூடாது என்பதற்காகவும் அரசு மீது பயம் இருக்க வேண்டும் என்பதற்காகவுமே இந்தளவுக்குக் கடுமையான தண்டனைகளை கிம் விதித்து வருகிறார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications