12 அணிகளுடன் ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய வாலிபால் போட்டி! கடல் கடந்து தமிழர்கள் கொண்டாட்டம்!
ரியாத்: சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் தமிழ்ச் சங்கம் சார்பில் 3ஆவது ஆண்டாக வாலிபால் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. தமிழர்களுக்காக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டு அதில் இறுதியாக ஒரு அணி வென்றது.
கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைந்த அங்கமாக திகழும் ரியாத் தமிழ்ச் சங்கம், பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள், மாணவர் கலைவிழா, கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு மூன்றாவது முறையாக கைப்பந்துப் போட்டிகள் (Volley Ball Match), கடந்த 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரியாத் அபெக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இதில்,
Fury Falcons - A
Fury Falcons - Z
Phoenix Strikers
Rising Titans
RTG
Shasma
Shockerz
Sinpers-1
Snipers-2
Spartans Batha
Star Boys
SATSA
ஆகிய 12 அணிகள் கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. 12 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு league போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் தலா ஒரு அணி அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதிப் போட்டியில் Spartans Batha Vs Shasma Snipers 1 Vs SATSA ஆகிய அணிகள் மோதியதில், Spartans Batha Vs Snipers 1 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. மிகவும் வலுவான போட்டியாக அமைந்த இறுதிப் போட்டியில், 3-2 என்ற புள்ளி கணக்கின் அடிப்படையில் Spartans Batha என்ற அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக (Man of the Match) spartans batha அணியை சேர்ந்த பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.
ஒரு நாள் முழுவதும் நடந்த இந்த விளையாட்டுப் போட்டியில், கைப்பந்து போட்டி (Volley Ball)ஒருங்கிணைப்பாளர் செந்தில், துணை ஒருங்கிணைப்பாளர் கவிமணி, விளையாட்டுக் குழு தலைவர் சரவணன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர். இந்த போட்டிகளில் ஏராளமான தமிழர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஸ்போர்ட்ஸ் சென்டர் மற்றும், தோசா கார்னர் ஸ்பான்ஸர்களாக இருந்து உதவினர். இந்த தகவல்களையும் புகைப்படங்களையும் அனுப்பி உதவியவர், ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அஹமது இம்தியாஸ் ஆவார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications