காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி அணிவகுத்த ராக்கெட்டுகள்.. மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம்
டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தொடங்கி 7 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், காசாவில் இருந்து இன்று மீண்டும் ராக்கெட் தாக்குதல் இஸ்ரேல் மீது நடத்தப்பட்டுள்ளது. இதனை இஸ்ரேல் ராணுவமும் உறுதி செய்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியத்தோடு பலரையும் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

இதனால், கடும் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டாமல் விட மாட்டோம் என அந்த அமைப்பு மீது போர் தொடுத்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இந்த தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. ஓராண்டை இந்த போர் தொட்டு விட்ட நிலையில், இன்னமும் இந்த சண்டை முடிவுக்க்கு வந்தபாடில்லை. இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே தொடங்கிய இந்த சண்டை தற்போது இஸ்ரேல் - ஈரான் மோதலாக வெடித்து இருக்கிறது.
இதற்கிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் தொடங்கி 7 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், காசா முனையில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து ராக்கெட் ஏவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை இஸ்ரேல் ராணுவமும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், "வடக்கு காசா முனையில் இருந்து பல ராக்கெட்டுகள் இஸ்ரேலிய பகுதிகளை நோக்கி வந்தன.
இவற்றில் சில இடைமறித்து அழிக்கப்பட்டன. சில ராக்கெட்டுகள் திறந்த வெளி இடங்களில் விழுந்தன. இஸ்ரேல் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் ஆதிக்கம் செலுத்தும் ஹிஸ்புல்லா அமைப்பு, ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சி குழு ஆகியவை ஈரானின் ஆதரவுடன் இஸ்ரேலுடன் ஆயுத மோதலில் ஈடுபட்டு இருக்கின்றன.
இதனால், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் நஸ்ரல்லாவுடன் இருந்த ஈரானின் மூத்த ராணுவ தளபதி அப்பாஸ் என்பவரும் கொல்லப்பட்டார்.
ராணுவ தளபதியின் உயிரிழப்புக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்தது. இதையடுத்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலும் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் இஸ்ரேலும் எச்சரித்து இருக்கிறது. இப்படியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேல் - ஹமாஸ் இடையே வெடித்த போரால், மத்திய கிழக்கு முழுவதும் உச்ச கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கொத்து கொத்தாக அமெரிக்க வீரர்கள் பலி? துபாய் உள்பட அரபு நாடுகளுக்கு ஈரான் கடும் வார்னிங் -
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
ஈரான் தினமும் 1310 கோடி சம்பாதிக்கிறது.. ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது தெரியுமா? -
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு











Click it and Unblock the Notifications