இதுதான் ரஷ்யா! அமெரிக்காவையே "பூமராங்" போல திரும்பி வந்து தாக்கிய அஸ்திரம்! உறைந்து போன மேற்கு உலகம்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: மேற்கு உலக நாடுகள் மாறி மாறி பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தும் கூட ரஷ்யாவை பொருளாதார ரீதியாக முடக்க முடியவில்லை. அதிலும் அமெரிக்கா எதை நினைத்து பொருளாதார தடை போட்டதோ அதற்கு எதிர் மாறாக முடிவுகள் வர தொடங்கி உள்ளன.. ரஷ்யாவை விட இந்த பொருளாதார தடையால் அமெரிக்காதான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது.

Recommended Video

    Russia-வை தண்டிப்பதாக நினைத்து America வைத்துக்கொண்ட ஆப்பு | Oneindia Tamil

    உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து ரஷ்யாவின் 300க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அலிகார்க்ஸ் ஆகியோர் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

    அதோடு ரஷ்ய நிறுவனங்கள் தடை பெற்றன. ரஷ்யாவின் அந்நிய செலாவணி நிதியில் சுமார் 640 பில்லியன் டாலரை மேற்கு உலக நாடுகள் முடக்கியது. இதனால் ரஷ்யா டாலர் வர்த்தகம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

    ரஷ்யா முடக்கம்

    ரஷ்யா முடக்கம்

    அதோடு ரஷ்யாவில் இருந்த 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறின. ரஷ்யா SWIFT எனப்படும் சர்வதேச பண பரிவர்த்தனை மெசேஜிங் தளத்தில் இருந்தும் நீக்கப்பட்டது. இதெல்லாம் ரஷ்யாவை முடக்கும் என்று நம்பி அமெரிக்க மற்றும் ஐரோப்பா இந்த உத்தரவுகளை போட்டது. ஆனால் இது ரஷ்யாவை அந்த அளவிற்கு பாதிக்கவில்லை. முதலில் ரஷ்யாவின் ரூபிள் மதிப்பே 137 என்ற அளவில் சரிந்தது உண்மைதான்.

    எதிர்பார்த்த அளவிற்கு இல்லை

    எதிர்பார்த்த அளவிற்கு இல்லை

    டாலருக்கு நிகரான ரூபிள் மதிப்பு 79ல் இருந்து 137 வரை மோசமாக சரிந்தது. இதனால் ரஷ்யா தனது பங்கு சந்தையை கூட கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் மூடியது. ரஷ்யாவை இந்த நடவடிக்கை முடக்கி போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த விதமான பெரிய பின்னடைவையும் சந்திக்காமல் ரஷ்யா மீண்டுவந்துள்ளது . சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்த தடைகளால் இப்போது அமெரிக்கா, ஐரோப்பாதான் பாதிப்படைய தொடங்கி உள்ளது.

    ரஷ்யா பதிலடி

    ரஷ்யா பதிலடி

    இப்படி பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட உடனே ரஷ்யா தனது பங்கிற்கு பதிலடியை கொடுக்க தொடங்கி உள்ளது. முதலில் அமெரிக்கா நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டன. அதன்படி உலக நாடுகளுடன் இனி டாலரில், யூரோவில் வர்த்தகம் செய்ய வேண்டாம். தங்கள் நாட்டு நாணயமான ரூபிளில் மட்டுமே எங்களுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இது தொடர்பாக புடின் தனது பேச்சில், ரஷ்யாவும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்க வேண்டும் என்றால், ரஷ்யாவிடம் நட்பாக இல்லாத எதிரி நாடுகள், ரூபிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    ரஷ்யா கண்டிஷன்

    ரஷ்யா கண்டிஷன்

    அமெரிக்காவிற்கு பதிலடியாக ரஷ்யா இந்த முடிவை எடுத்துள்ளது. ஐரோப்பாவில் உள்ள நாடுகள் அனைத்தும், பிரிட்டன், ஜப்பான், கனடா, நார்வே,அமெரிக்கா, சிங்கப்பூர், தென் கொரியா, சுவிட்சர்லாந்து, உக்ரைன் போன்ற நாடுகள் எல்லாம் எங்களுடன் ரூபிளில் மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும் என்று புடின் அறிவித்துள்ளார். அதோடு ஜி7 நாடுகள் எல்லாம் எங்களுடன் இயற்கை எரிவாயு வாங்க இனி ரூபிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று புடின் கண்டிஷன் போட்டுள்ளார்.

    வேறு வழியில்லை

    வேறு வழியில்லை

    இதற்கு இப்போது ஐரோப்பா, ஜி7 நாடுகள் மறுத்து வந்தாலும் அவர்களுக்கு வேறு வழி இல்லை. ஐரோப்பா தனது மொத்த எண்ணெய் தேவையில் 60 சதவிகிதத்தை ரஷ்யாவை நம்பி உள்ளது. இயற்கை எரிவாயுவிலும் 60 சதவிகிதம் ரஷ்யாவில் இருந்தே வருகிறது. அப்படி இருக்கும் போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டை கேட்க வேண்டிய கட்டாயம் ஐரோப்பாவிற்கும் மற்ற மேற்கு உலக நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் ரூபிள் தேவை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இந்தியா , சீனா

    இந்தியா , சீனா

    ஏற்கனவே இந்தியா ரஷ்யாவுடன் ரூபிள் வர்த்தகத்தை மேற்கொள்ளும் முடிவில் உள்ளது. சீனாவிலும் இதே நிலைதான். இன்னொரு பக்கம் மற்ற உலக நாடுகளும் ரூபிள் வர்த்தகத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையென்றால் ஆயில்,கேஸ், தானியங்கள் கிடைக்காது. இதனால் ரூபிள் தேவை அதிகரித்து உள்ளது. தேவையை பொறுத்தே பண மதிப்பு நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படியே தற்போது ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது.

    மார்ச் மாதம் பெஸ்ட்

    மார்ச் மாதம் பெஸ்ட்

    டாலருக்கு நிகரான ரூபிள் மதிப்பு 83 ஆக முன்னேறி உள்ளது. இது போருக்கு முன்பு இருந்த சூழல் ஆகும். இதன் அர்த்தம் பொருளாதார தடைகள் ரஷ்யாவை பாதிக்கவில்லை என்பதே ஆகும். அதோடு இந்த மார்ச் மாதம் மிக சிறப்பாக பர்பார்ம் செய்த நாணயம் ரூபிள்தான் என்று பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 60 சதவிகித முன்னேற்றத்தை ரூபிள் நாணயம் டாலருக்கு நிகராக பெற்றுள்ளது. வரும் நாட்களில் ரூபிள் மதிப்பு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+