ஈரான் - இஸ்ரேல் போர்.. குறுக்கே வந்த ரஷ்யா.. கண்கள் சிவந்த புடின்.. இஸ்ரேலுக்கு விழும் சவுக்கடி!
மாஸ்கோ: இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய 'ஆபரேஷன் லயன்' தாக்குதலை ரஷ்யா கண்டித்துள்ளது. இந்த தாக்குதல் மிக மோசமானது எனவும், ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும், இது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ரஷ்யா கண்டனம்
இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதாக ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இப்பிராந்தியத்தில் இதன் விளைவுகள் தீவிரமாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளது. ரஷ்யா, ஈரானில் மிக மோசமான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டு உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றுள்ளனர்.
இஸ்ரேல் ஈரான் போர்
ஈரான் நாட்டின் முக்கியமான ராணுவ தலைவர்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன. விமானத் தாக்குதல்களுடன் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட், ஈரான் நாட்டிற்குள் சில நாசவேலைகள் மற்றும் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் இஸ்ரேலின் முக்கிய ராணுவ தலைகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான சில தகவல்களின்படி, ஈரான் புரட்சிகர காவல்படையின் உயர்மட்டத் தலைவர் கொல்லப்பட்டது மட்டுமல்லாமல், மூத்த இராணுவ தளபதிகள், முக்கிய கல்வியாளர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகள் பலரும் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
இதையடுத்து தற்போது நேற்று இரவு முதல் இஸ்ரேல் ஈரான் இரண்டு நாடுகளும் சரமாரியாக மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் போர் உச்சம் அடைந்து உள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் ஏவுகணை அட்டாக் நடத்தி உள்ளது. இதன் மூலம் 2 நாட்களில் 3வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
ரஷ்யா கண்டனம்
வெள்ளிக்கிழமை அன்று, இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலை ரஷ்யா கடுமையாக கண்டித்தது. ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான RIA Novosti, இந்த தாக்குதலை கடுமையானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியது. மேலும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.
இஸ்ரேலின் அதிகாலை தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், "மத்திய கிழக்கில் பதட்டமான சூழல் நிலவுவது கவலை அளிக்கிறது. இஸ்ரேல் அரசு வேண்டுமென்றே பதற்றத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஐ.நா. சாசனத்தை மீறி ஈரான் மீது இஸ்ரேல் படைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது.
இஸ்ரேல் 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் ஈரான் எல்லைக்குள் அதிரடி தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களிலேயே ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதல் காரணமாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை கூட்ட உள்ளது. அவசர ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஈரானின் கோரிக்கையை ஆதரித்துள்ளன.
-
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு! பேசிக்கொண்டிருக்கும்போதே.. சாரை சாரையாக வெளியேறிய மாணவர்கள்! -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன?












Click it and Unblock the Notifications