அய்யனார் துணை சீரியலில் இனி கதை இதுதான்.. 4 மருமகள்கள் வந்ததும் நடக்கும் ஆட்டம்.. இயக்குனர் உடைத்த ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி இந்த சீரியலின் இயக்குனர் ராம்குமார் சமீபத்தில் ஒரு youtube சேனலில் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பல சுவாரசியமான தகவல்களை அவர் சொல்லி இருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் அய்யனார் துணை சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு அதிக வரவேற்பு இருந்தது. இப்போது அந்த சீரியலையும் பின்னுக்கு தள்ளி அய்யனார் துணை இளம் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பது தான் பலருடைய எதிர்பார்ப்பு.

அய்யனார் துணை சீரியல் கதை

ஏற்கனவே சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என 4 அண்ணன் தம்பிகளும் தனியாக வசித்து வந்த நிலையில் இப்போது அவர்களுடைய வீட்டிற்குள் சோழனால் நிலா என்ற மருமகள் வந்திருக்கிறார். சோழன் நிலாவை பார்த்ததும் காதலித்தாலும் நிலாவிற்கு தெரியாமலேயே அவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். இதனால் விவாகரத்தும் நடந்து விட்டது.

விஜய் டிவி மகா நடிகை நிகழ்ச்சியில் ஏமாத்திட்டாங்க.. இப்படி எல்லாம் நடக்குது..! நடிகை சொன்ன பகீர் விஷயம்
பிறகு நடந்த உண்மைகள் எல்லாம் தெரிந்ததும் நிலாவும் இப்போது சோழனை காதலிக்க ஆரம்பித்தது, இருவருக்கும் குடும்பத்தினர் முன்பு மீண்டும் திருமணம் நடைபெற்று இருக்கிறது. அதே நேரத்தில் மற்ற மூன்று பேருமே காதலித்து வருகிறார்கள் இதில் பாண்டி காதலி வானதி மட்டும் இந்த வீட்டிற்கு வேண்டவே வேண்டாம்பா... இந்த பொண்ணு வந்தா இந்த குடும்பமே வீணா போயிடும் என்று பல பெண் ரசிகைகள் கதறிக் கொண்டிருக்கின்றனர்.

Ayyanar Thunai Serial Vijay TV

ஆனால் இது பற்றி இந்த சீரியலின் இயக்குனர் சொல்லும்போது, என்னிடம் கூட பலர் சோசியல் மீடியா கமெண்ட்ஸ்களிலும் கூட அந்த பொண்ணு இந்த சீரியலுக்கு வேண்டாம் என்று சொல்லுறாங்க. ஆனா வானதி கேரக்டரில் நடிக்கும் நடிகை ரொம்ப நல்ல பொண்ணு. சீரியலுக்காக அவங்களோட கேரக்டர் அப்படி இருக்கிறது அவ்வளவுதான். இனி இந்த சீரியலில் அடுத்ததாக சேரன் கல்யாணம்தான் பிரம்மாண்டமாக நடக்கும்.

Ayyanar Thunai Serial Vijay TV

அதில் பலர் டுவிஸ்ட்டுகள் இருந்தாலும் அது ஒரு பெரிய சந்தோஷமான தருணமாக இருக்கும். அந்த சீரியலை இளைஞர்கள் இப்போது விரும்பி பார்ப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு முன்பு செம்பருத்தி சீரியல் தான் இயக்கினேன். ஆரம்பத்தில் அந்த சீரியலில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது கூட அது ஒரு ரீமேக் சீரியல் அதை போய் நாம பண்ணுறோமே என்ற வருத்தம் எனக்குள் இருக்கும். ஆனால் இப்போ என்னுடைய சீரியலை ரீமேக் பண்ணுவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

Ayyanar Thunai Serial Vijay TV

இயக்குனர் சொன்ன ரகசியம்

மேலும் இனி இந்த சீரியலில் நான்கு பேருக்கும் கல்யாணம் முடிந்து நான்கு மருமகள்கள் ஒரே வீட்டிற்குள் வந்த பிறகுதான் ஆட்டமே சூடு பிடிக்கும். மத்த மூன்று பெண்களும் தமிழ் பெண்களாக இருக்கும் போது சோழன் மனைவி மட்டும் தமிழே தெரியாத பெண்ணாக இருக்கிறார். அதனால் குடும்பத்திற்குள் சில சுவாரசியமான சம்பவங்களும் நடக்கும் என்று க்ளூ கொடுத்திருக்கிறார். இதனால் அடுத்ததாக சேரன் கல்யாணம் எப்போ வரும் என்று கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+