தமிழ்நாட்டில் பால் விலை உயர்வு! நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய விலை!
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் பால் அரை லிட்டருக்கு ரூ2., ஒரு லிட்டருக்கு ரூ.3 என விலை உயர்த்தப்படும் என தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா அறிவித்திருக்கிறது.
இந்த திடீர் விலை உயர்வு காரணமாக மக்கள் அதிருப்பதியடைந்திருக்கின்றனர். ஏற்கெனவே தமிழகம் முழுவதுமான தேவைக்கு ஆவின் பால் கிடைப்பது கிடையாது. நகரங்களில் மட்டுமே ஆவினின் ஆதிக்கம் இருக்கிறது.

எனவே கிராமப்புற மக்கள் பெரும்பாலும் தனியார் பால் நிறுவனங்களை நம்பிதான் இருக்கின்றனர். தனியார் பால் பாக்கெட்டுகள், ஆவின் பால் பாக்கெடுகளுடன் ஒப்பிடும்போது விலை அதிகம். இப்படி இருக்கையில் மேலும் விலை உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருப்பது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.
தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, தெலங்கான என தென் மாநிலங்களில் பரவலாக பால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே வேறு வழியின்றி பால் விலையை அதிகரிப்பதாக தனியார் நிறுவனங்கள் கூறியிருக்கின்றன. ஆரோக்யா நிறுவனத்தை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் விலை உயர்வை அறிவிக்க இருக்கின்றன.
பருவமழை போதுமான அளவு பெய்யாதது, இதன் காரணமாக தீவனங்களின் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, லாரிகளின் வாடகை அதிகரிப்பு போன்ற காரணங்களால் விலை உயர்வு அமல்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
- சமன்படுத்தப்பட்ட பால் 500 மி.லி - ரூ.29லிருந்து, ரூ.31ஆகவும்
- நிலப்படுத்தப்பட்ட பால் 500 மி.லி - ரூ.35லிருந்து, ரூ.37ஆகவும்
- கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் 500 மி.லி - ரூ.39லிருந்து, ரூ.41ஆகவும்
- சமன்படுத்தப்பட்ட பால் 1 லி - ரூ.66லிருந்து, ரூ.69ஆகவும்
- கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் 1 லி - ரூ.73லிருந்து, ரூ.76ஆகவும்
நாளை முதல் விலை உயர்த்தப்பட இருக்கிறது. அதேபோல ஆரோக்யா தயிர் 500 மி.லி ரூ.40லிருந்து ரூ.42 ஆகவும், ஹாட்சன் தயிர் ரூ.42லிருந்து ரூ.44ஆகவும் ரேட் அதிகரிக்கப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications
