Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா முதுகில் குத்தும் புதின்? நம்மை சீண்டும் வங்கதேசத்துக்கு ஹெலிகாப்டர் வழங்கும் ரஷ்யா! பின்னணி

Subscribe to Oneindia Tamil

டாக்கா: அண்டை நாடான வங்கதேசம் நம் நாட்டுடன் தொடர்ந்து மோதலை கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில் தான் நம் நாட்டின் உற்ற தோழனான ரஷ்யா சார்பில் வங்கதேசத்துக்கு Mi-171A2 ரக நவீன ஹெலிகாப்டர்கள் வழங்க உள்ளது. இது வங்கதேசத்துக்கு பெரும் பூஸ்ட்டாக அமைய உள்ள நிலையில் ரஷ்யா நம் நாட்டின் முதுகில் குத்துகிறதா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. உண்மையில் என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

அண்டை நாடான வங்கதேசத்துக்கும், நம் நாட்டுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. வங்கதேசம் நாடு உருவானதில் இருந்து இப்போது தான் நமக்கும், அவர்களுக்குமான உறவு என்பது மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதற்கு அங்குள்ள இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தான் காரணம்.

bangladesh russia helicopter

இவர் தான் நம் நாட்டை சீண்டி வருகிறார். இருநாட்டு எல்லையில் நம் நாட்டின் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் - வங்கதேசத்தின் எல்லை காவல் படையினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதோடு நம் நாட்டுக்கு எதிரியாக உள்ள பாகிஸ்தான், துருக்கியுடன் சேர்ந்து வங்கதேசம் செயல்பட தொடங்கி உள்ளது. இது நம் நாட்டுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேசத்தின் இந்த மோதல் போக்கிற்கு நடுவே தான் பாகிஸ்தான் அந்த நாட்டு ராணுவத்துக்கு பயிற்சி அளிக்க உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து ஏவுகணையை வங்கதேசம் கேட்டுள்ளதோடு, துருக்கி நாட்டிடம் இருந்து நவீன தொழில்நுட்பம் கொண்ட டேங்குகளை வாங்க வங்கதேசம் ஆர்வம் காட்டி வருகிறது. இதன் பின்னணியில் வங்கதேசம் நம் நாட்டை தான் குறிவைப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் நமது நாடும் வங்கதேசத்தின் நடவடிக்கையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது வங்கதேசத்துக்கு நம் நாட்டின் நெருங்கிய நண்பனான ரஷ்யா புதிய ஹெலிகாப்டர்களை வழங்க உள்ளது. நம் நாட்டுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சூழலில் இது வழங்கப்பட உள்ளதால் பலருக்கும் சந்தேகம் ஒன்று எழுந்துள்ளது. அதாவது ரஷ்யா காலம் காலமாக நம் நாட்டுடன் நட்புடன் உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் எப்போதும் நம் பக்கம் தான் ரஷ்யா இருந்தது. ஆனால் இப்போது நம் நாட்டுடன் மோதி வரும் வங்கதேசத்துக்கு ரஷ்யா ஏன் நவீன ஹெலிகாப்டர்களை வழங்குகிறது? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. அதோடு ரஷ்யா நம் நாட்டின் முதுகில் குத்துகிறதா? என்ற கேள்வியும் இயல்பாக பலருக்கும் எழலாம்.

இதற்கு விடை சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா நம் நாட்டுக்கு துரோகம் செய்யவில்லை. முதுகிலும் குத்தவில்லை. ஏனென்றால் தற்போது ரஷ்யா, வங்கதேசத்துக்கு வழங்கும் ஹெலிகாப்டரின் பெயர் Mi-171A2. இந்த ஹெலிகாப்டரை ரஷ்யாவின் ரோஸ்டெக் (Rostec) நிறுவனத்தின் ஒருபகுதியாக இருக்கும் ‛ரஷ்யன் ஹெலிகாப்டர்' தான் தயாரித்துள்ளது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ரோஸ்டெக் நிறுவனம் என்பது ரஷ்யாவின் அரசு நிறுவனமாகும். இது ரஷ்யாவுக்கு ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை 2007ல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தான் தொடங்கினார். அப்போது அதன் பெயர் ரஷ்யன் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் என்று இருந்தது. அதன்பிறகு 2012ல் தான் ரோஸ்டெக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இருப்பினும் 2007 முதல் அதன் தலைமை செயல் அதிகாரியாக புதினால் நியமிக்கப்பட்டவரின் பெயர் செர்ஜி விக்டோரோவிச் செமசோவ். இவர் தற்போதும் ரோஸ்டெக்கின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இந்த செர்ஜி விக்டோரோவிச் செமசோவ் யார் என்றால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நெருங்கிய நபர். அதோடு புதினுடன் சேர்ந்து ரஷ்யாவின் ரகசிய உளவு பிரிவான கேஜிபியில் சேர்ந்து பணியாற்றியவர். 1980ல் கிழக்கு ஜெர்மனியில் பணியாற்றியபோது விளாடிமிர் புதினுடன், செர்ஜி விக்டோரோவிச் செமசோவுக்கு நட்பு ஏற்பட்டது. புதினின் இந்த நட்பு தான் அவருக்கு ரோஸ்டெக்கின் தலைமை செயல் அதிகாரி பதவியை பெற்று கொடுத்தது.

இந்த ரோஸ்டெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்த ரோஸ்டெக் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ‛ரஷ்யன் ஹெலிகாப்டர்' நிறுவனம்(50 சதவீத பங்கு ரோஸ்டெக்கிடம் உள்ளது) தான் தற்போது வங்கதேசத்துக்கு Mi-171A2 ரக ஹெலிகாப்டரை வழங்குகிறது. இந்த ஹெலிகாப்டருக்கான ஒப்பந்தம் என்பது ரஷ்யா - வங்கதேசம் இடையே 22.3 மில்லியன் டாலர் மதிப்புக்கு கடந்த 2021ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வங்கதேச பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. இந்த ஒப்பந்தத்தின்போது வங்கதேசம் நம் நாட்டுடன் நல்ல நட்பில் தான் இருந்தது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் ரஷ்யா தற்போது வங்கதேசத்துக்கு Mi-171A2 ரக ஹெலிகாப்டரை வழங்க உள்ளது. ஒப்பந்தத்தின்படி தற்போது 2 ஹெலிகாப்டர்கள் வங்கதேசத்துக்கு வழங்கப்படுகிறது.

தற்போது ரஷ்யாவில் இறுதிக்கட்ட சோதனையில் இந்த ஹெலிகாப்டர்கள் உள்ளன. விரைவில் வங்கதேசத்துக்கு கொண்டு வரப்படுகிறது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்த ஹெலிகாப்டர் வங்கதேசத்துக்கு வந்து இறங்க வாய்ப்புள்ளது. இந்த Mi-171A2 ரக ஹெலிகாப்டர் என்பது ஹெலிகாப்டர் துறையில் வங்கதேசத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும். ஏனென்றால் Mi-8/17 ரக ஹெலிகாப்டர் சீரியஸில் புதிய நவீன வசதியுடன் Mi-171A2 ரக ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

Mi-171A2 ரக ஹெலிகாப்டர் என்பது நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டதாகும். மல்டி பர்பஸ் வகையை சேர்ந்தது. அதோடு Klimov VK-2500PS-03 டர்போஷாஃப்ட் இன்ஜினை கொண்டுள்ளது. இது 2,400 குதிரைதிறன் கொண்ட டேக்ஆஃப் வசதியை வழங்கும். அதோடு அதிக சுமையை தாங்கி செல்ல முடியும். மணிக்கு 260 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ஹெலிகாப்டரால் பறக்க முடியும். Auxilliary fuel tanks வசதி உள்ளது. இதனால் ஹெலிகாப்டரால் 800 கிலோமீட்டர் வரை நிற்காமல் பறந்து செல்ல முடியும்.

18.17 மீட்டர் நீளத்துடன், 4.76 மீட்டர் உயரம் கொண்டது இந்த ஹெலிகாப்டர். GALS-D2 சேட்டிலைட் நேவிகேஷன், ARK-UD ஆட்டோமேட்டடர் டைரக்சன் பைன்டர் வசதி உள்ளது. இந்த ஹெலிகாப்டரை கொண்டு வங்கதேசம் தனது பாதுகாப்பு துறையை பலப்படுத்த முடியும். நவீன ரேடார் வசதி உள்ளது. இதன்மூலம் மோசமான வானிலையையும் முன்கூட்டியே அறிந்து அதிலும் இயங்கும் தன்மை கொண்டது இந்த ஹெலிகாப்டர். மலைப்பிரதேசங்களின் மேலாக 6 ஆயிரம் மீட்டர் உயரத்தில் இந்த ஹெலிகாப்டரால் பறக்க முடியும். மெஷின் கன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ராக்கெட், Anti Tank guided missiles உள்ளிட்டவற்றை இந்த ஹெலிகாப்டரில் பயன்படுத்த முடியும்.

இந்த ஹெலிகாப்டர் என்பது வங்கதேசத்தில் மீட்பு பணி, தேடுதல் பணி, தீயணைப்பு நடவடிக்கை, அவசரகால மருத்துவ சேவை உள்ளிட்டவற்றுக்கு இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியும். ஹெலிகாப்டரில் 26 பயணிகள் அல்லது அவசர காலத்தில் 12 ஸ்ட்ரெச்சர்களில் 12 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். தற்போது வங்கதேசம் ராணுவ வீரர்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கும், தளவாடம், மருத்துவம் சார்ந்த பொருட்களை ஏற்றி செல்லவும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகிறது.

அந்த வகையில் சீனாவின் ஹார்பின் ஜி-9 ரக ஹெலிகாப்டர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதேபேல் பிரெஞ்சு யூரோகாப்டர் AS365 பயன்பாட்டில் உள்ளது. வங்கதேச கடற்படையில் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் AW109 ரக ஹெலிகாப்டர் பயன்பாட்டில் உள்ளது. தற்போது ரஷ்யா வழங்கும் Mi - 171A2 ரக ஹெலிகாப்டரையும் வங்கதேசம் பயன்படுத்த உள்ளது. இது அந்த நாட்டுக்கு கூடுதல் பலத்தை அளிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+