கிம் உடன் கைகோர்த்த புதின்! உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவில் களமிறங்கியது வடகொரிய ராணுவம்!
மாஸ்கோ: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா தனது சிறப்பு ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் எனும் நாடு ஆரம்பத்தில் சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது வரை எந்த பிரச்னையும் எழவில்லை. ஆனால், 1990களில் சோவியத் உடைந்தது. இதன் பின்னர் உக்ரைன் தனி நாடாக பிரிந்து சென்றது. அங்குதான் பிரச்னையே தொடங்கியது. உக்ரைன் ஆட்சியாளர்களை அமெரிக்கா ஆதரிக்க, அங்கு விரைவிலேயே அமெரிக்காவின் முழு ஆதரவு கொண்ட அதிபராக ஜெலன்ஸ்கி உருவானார்.

அதன் பின்னர் அமெரிக்காவின் அனைத்து ஒப்பந்தங்களிலும் உக்ரைன் கையெழுத்திட தொடங்கியது. குறிப்பாக நேட்டோ ஒப்பந்தத்தில் இணைந்தது. இதுதான் போருக்கான தொடக்கப்புள்ளி. நேட்டோ என்பது அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவமாகும். இதில் இணையும் நாடுகளில் நேட்டோ படை நிலை நிறுத்தப்படும். நேட்டோவில் இணைந்த நாட்டின் மீது வெளி நாடுகள் ஏதேனும் தாக்குதல் நடத்தினால், பதில் தாக்குதலுக்கு அமெரிக்காவும் அதன் படைகளும் களத்தில் இறங்கும்.
இந்த ஒப்பந்தத்தில் உக்ரைன் கையெழுத்து போட்டது ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் உக்ரைன் ரஷ்யாவுடன் தனது எல்லையை பகிர்ந்துகொண்டிருக்கிறது. நேட்டோ ஒப்பந்தத்தால் அமெரிக்க படைகள், ரஷ்ய எல்லையில் குவிக்கப்படும். இதை ரஷ்யா விரும்பாததால், கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது போரை அறிவித்தது.
போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஏராளமான உதவிகளை செய்துள்ளது. ஆயுதங்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு என இன்று வரை ரூ.14,7 லட்சம் கோடியை அமெரிக்கா வாரி வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டின் ஒரு ஆண்டுக்கான பட்ஜெட் தொகையே வெறும் ரூ.4 லட்சம் கோடிதான். இத்துடன் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட தொகை, சுமார் 5 மடங்கு அதிமாகும்.
இவ்வளவு பெரிய தொகையை கொண்டு வாங்கப்பட்ட ஆயுதங்களுடன் களத்தில் இருக்கும் உக்ரைனை சமாளிக்க, வடகொரியாவிலிருந்து ரஷ்யா புதிய வீரர்களை இறக்கியுள்ளது. சுமார் 15,000 வீரர்கள் வரை ரஷ்யா களமிறங்கியுள்ளதாகவும், இவர்களின் அடையாளத்திற்கு தனியான அடையாள அட்டையை வழங்கியுள்ளதாகவும் தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
சபாஷ்.. கை கோர்க்கும் தமிழர்கள்-கன்னடர்கள்! பெங்களூரில் முதல்முறையாக நடக்கிறது ஒற்றுமை மாநாடு!
ஏற்கெனவே ரஷ்யாவில் இருந்து இயங்கும் சில ஏவுகணைகளை வட கொரியாதான் வடிவமைத்து கொடுத்திருக்கிறது. அதை பராமரிக்கவும், இயக்கவும், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் அதை சரி செய்யவும், சில பொறியாளர்களை வடகொரியா அனுப்பி வைத்திருந்தது. தற்போது இதனை தொடர்ந்து சிறப்பு ராணுவ வீரர்களையும் அனுப்பியுள்ளது பேசு பொருளாகியுள்ளது.
50களில் கொரியா நாடுகள் சுதந்திரம் பெற்ற பின்னர், வடகொரியா கம்யூனிச நாடாகவும், தென் கொரியா அமெரிக்காவின் ஆதரவுடன் முதலாளித்துவ நாடாகவும் மாறியது. அப்போதிலிருந்து வடகொரியாவுக்கும், ரஷ்யாவுக்கும் நல்ல நட்பு நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications