ரஷ்யாவில் தீ பற்றி எரிந்த விமானம்.. அலறிய பயணிகள்.. 41 பேர் பலியான பரிதாபம்.. 37 பேர் படுகாயம்!
ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் மொத்தம் 41 பேர் பலியானார்கள்.
Recommended Video
மாஸ்கோ: ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மொத்தம் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் ரஷ்யாவை உலுக்கி உள்ளது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஷ்ரேமெட்யோவ் விமான நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்திற்கு உள்ளானது ஏரோபோல் சுகோய் சூப்பர் ஜெட் வகை விமானம் ஆகும்.
இந்த பயணிகள் விமானம் தொழிநுட்ப கோளாறு காரணமாக விபத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கோளாறு
இந்த ஏரோபோல் சுகோய் சூப்பர் ஜெட் விமானம் மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் பிரச்சனைக்கு உள்ளானது. இதில், ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மீண்டும் திரும்பி மாஸ்கோ நோக்கி வந்தது. ஷ்ரேமெட்யோவ் விமான நிலையத்தில் எமர்ஜென்சி லேண்டிங் செய்ய முயன்றது.

ஆனால் முடியவில்லை
ஆனால் விமானம் முதல்முறை லேண்ட் செய்ய முயன்ற போது லேண்ட் செய்ய முடியவில்லை. இதனால் இரண்டாவது முறை கஷ்டப்பட்டு விமானத்தை தரையிறக்கினார்கள். விமானத்தை இறக்கிய போது, திடீர் என்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதில் தீ பிடித்தது. வேகமாக விமானத்தின் ஒரு பக்கம் தீ பிடித்தது.
|
மிக மோசம்
இதில் விமானம் ஒரு பக்கம் உரசிக்கொண்டே சென்றது. விமானத்தின் ஒரு பக்க இறக்கை உடைந்து சிதறியது. உள்ளே பயணிகள் அலறல் வெளியே கேட்டது. இந்த விமானத்தில் 78 பேர் பயணம் செய்தார்கள். இந்த விபத்தில் 41 பேர் உடல்கருகி பலியானதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
எப்படி நடந்தது
இதில 37 பேர் படுக்காயம் அடைந்துள்ளனர். இவர்கள் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து எப்படி நடந்தது என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications