சூடானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம்? உக்ரைன் போருக்கு நடுவே எகிறும் டென்ஷன்.. என்ன நடந்தது?
வாஷிங்டன்: சூடானில் உள்நாட்டு பிரச்சினை நடந்து வரும் நிலையில், அங்குள்ள துணை ராணுவ படையால் ரஷ்யா நாட்டிற்கு சொந்தமான சரக்கு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ரஷ்யா கூறியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாடு மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. அப்போது முதல் தொடர்ச்சியாக இந்த சண்டை நீடித்து வருகிறது.

இரு பக்கமும் ஏராளமான உயிர் பலி ஏற்பட்டுள்ளது. எனினும், ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வந்தபாடில்லை. தொடர்ச்சியாக சண்டை நீடித்து வரும் நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் எடுக்கும் முயற்சிகளுக்கு இன்னும் பலன் கிட்டவில்லை. இந்த போர் ஒரு பக்கம் இருக்க, சூடானில் ரஷ்யாவின் சரக்கு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது ரஷ்யாவுக்கு அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில், தற்போது ராணுவ ஆட்சி அமலில் உள்ளது. சூடானில் ரேபிட் போர்ஸ் எனப்படும் விரைவு படையினரை(RSF) ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதி ஃபடக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் மோதல் நீடித்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த சண்டை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தான், சூடான் வான்பரப்பில் சென்று கொண்டிருந்த ரஷ்யாவுக்கு சொந்தமான சரக்கு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சூடான் ரேபிட் சப்போர்ட் படை கூறுகையில், "சூடான் ராணுவத்திற்கு ஆதரவாக வந்த அந்நிய நாட்டு போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த விமானம் பீப்பாய் குண்டுகளை வீசியது.
கூலிப்படைகளாக செயல்படும் அனைத்து வெளிநாட்டு விமானங்களும் இந்த நடவடிக்கையில் சுட்டு வீழ்த்தப்படும்" என்று தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய தூதரகம், சாட் நாட்டு எல்லையை ஒட்டியுள்ள டர்பர் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சொல்லப்படும் சரக்கு விமானம் பற்றிய தகவலை உறுதி செய்ய விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications