"வார் கிரைம்".. உக்ரைனில் கொத்து கொத்தாக vaccum குண்டுகளை போடும் ரஷ்யா? பரபரப்பு.. பெரும் ஆபத்து!
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா vaccum குண்டுகளை வீசுவதாக உக்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை புகார் வைத்துள்ளது. சர்வதேச அரங்கில் இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பான ஐநா பொதுச்சபை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் போர் உலகம் முழுக்க கவனம் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 30 நாடுகள் இதுவரை உக்ரைனுக்கு உதவ முன் வந்துள்ளது.
போர் கடந்த 5 நாட்களாக தீவிரமாக நடந்து வரும் நிலையில் இன்று 6வது நாளை எட்டி உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் தற்போது இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் தீவிரமாக நடந்து வருகிறது.

குண்டு
இந்த நிலையில்தான் உக்ரைன் மீது ரஷ்யா vaccum குண்டுகளை வீசுவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டி உள்ளது. அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதர் இந்த புகாரை வைத்து இருக்கிறார். அதேபோல் அம்னஸ்டி மற்றும் பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தடை செய்த குண்டுகளையும், கொத்து குண்டுகளையும் உக்ரைன் மீது ரஷ்யா போட்டு வருவதாக உக்ரைன் தூதர் புகார் வைத்து இருக்கிறார். கொத்து குண்டுகளை பயன்படுத்த உலகம் முழுக்க தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏன் ஆபத்து
இதில் vaccum குண்டுகள் என்பது 100 சதவிகிதம் வெடிமருந்து கொண்ட குண்டுகள் ஆகும். இந்த குண்டுகள் வெடிக்கும் போது அதில் ஆக்சிஜன் இருக்காது. மாறாக சுற்றுப்புறத்தில் உள்ள ஆக்சிஜனை பயன்படுத்தி அது நெருப்பை ஏற்படுத்தும். சுற்றுப்புறத்தில் இதனால் மிகப்பெரிய அளவில் நெருப்பு உண்டாகும். தரைகளில் இந்த குண்டுகளை பயன்படுத்தும் போது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதன் பாதிப்பு நீண்ட தூரத்திற்கு, நீண்ட நேரத்திற்கும் இருக்கும்.

எப்படிப்பட்டது
வேக்கம் குண்டுகளை சில நாடுகள் போரில் பயன்படுத்த தடை செய்துள்ளன. அதிக நெருப்பை உண்டாக்கி மிக மோசமான பாதிப்பை இது ஏற்படுத்தும். இந்த குண்டுகளை ரஷ்யா உக்ரைன் மீது பயன்படுத்துவதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. பொதுவாக வேக்கம் குண்டுகள் சுரங்கங்கள், பதுங்கு குழிகளை அழிக்க அதிகம் பயன்படும் என்பதால் ரஷ்யா இதை பயன்படுத்தி வருகிறது. மனிதர்களை அப்படியே சுட்டெரிக்கும் ஆற்றல் கொண்டது இந்த குண்டுகள்.

பங்கர்
முன்னதாக ரஷ்யா இந்த குண்டுகளை பயன்படுத்தவதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே வெளியானது. வேக்கம் குண்டுகளை செலுத்தும் ராக்கெட்டுகளை ரஷ்யா பயன்படுத்தியது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான புகைப்படங்கள் கூட வெளியானது. பல்வேறு நாடுகள் இந்த குண்டுகளை தடை செய்துள்ளது. உக்ரைனில் மக்கள் பலர் பங்கரில் இருக்கிறார்கள்.

அமெரிக்கா
அவர்களை குறி வைத்து ரஷ்யா இப்படி தாக்குவதாக தெரிகிறது. முக்கியமாக பங்கரில் பல இந்தியர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா இந்த குண்டுகளை தடை செய்துள்ள நிலையில் ரஷ்யா இந்த குண்டுகளை பயன்படுத்தி இருந்தால் அது வார் கிரைம் அதாவது போர் குற்றம் என்று கருதப்படும். இது தொடர்பாக விசாரணை நடத்துவோம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications