வெறும் 6 நாளில் 6000 ரஷ்ய வீரர்கள் பலி.. பலர் சிறை பிடிப்பு.. பெரிய "ட்விஸ்ட்" தந்த உக்ரைன் அதிபர்!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: 6 நாட்களாக நடந்து வரும் போரில் இதுவரை 6000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையில் போர் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை காலை உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்தது. உக்ரைன் அரசு ஐரோப்பாவிற்கு நெருக்கமாகவும், நேட்டோ படைகளுக்கு நெருக்கமாகவும் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.

உக்ரைனை ரஷ்யா அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்கி வருகிறது. முக்கியமாக மேற்கு உக்ரைன் பரப்பை குறி வைத்து ரஷ்யா தாக்கி வருகிறது.

கார்கிவ்

கார்கிவ்

உக்ரைனின் கார்கிவ் பகுதியில்தான் ரஷ்யா இதுவரை கொடூர தாக்குதலை நடத்தி உள்ளது. அங்கு கடந்த 4 நாட்களாக கடுமையான ஏவுகணை தாக்குதல்கள், பீரங்கி தாக்குதல்கள் நடந்து உள்ளது. அங்கு மட்டும் அதிகாரபூர்வமாக 50 பேர் வரை பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையான கணக்கு இதைவிட அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ரஷ்யாவின் ஒரு சில விமானங்களும் இங்குதான் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தலைநகர் கீவ்

தலைநகர் கீவ்

அதேபோல் தலைநகர் கீவிலும் கூட ரஷ்யா கடுமையான தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. அங்கு படைகளை ரஷ்யா முழு முதற் தாக்குதலை இன்னும் நடத்தவில்லை. சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரஷ்யா தனது பீரங்கிகளை குவித்து வைத்துள்ளது. நேற்று இந்த பீரங்கிகளின் சில உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தியது. இங்கிருந்து மக்களை வெளியேற ரஷ்யா உத்தரவிட்டது. இதனால் வரும் நாட்களில் இந்த பகுதி முழுக்க ரஷ்ய படைகள் மொத்தமாக பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதவி

உதவி

இந்த நிலையில்தான் உக்ரைனுக்கு மேற்கு உலக நாடுகள் உதவி வருகின்றன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்ற ஐரோப்பிய நாடுகள் பல உதவி வருகின்றன. பல நாடுகள் பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கி உள்ளன. அதேபோல் ஏவுகணைகள், குண்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றையும் உக்ரைனுக்கு 30க்கும் அதிகமான நாடுகள் வழங்கி உள்ளன. மேலும் உலக வங்கி தொடங்கி அமெரிக்கா வரை பல நாடுகள் உக்ரைனுக்கு பொருளாதார ரீதியாக பல மில்லியன் டாலர்களை வாரி இறைத்துள்ளது.

போர்

போர்

இதனால் இந்த போரில் இப்போது வரை உக்ரைனின் கை கொஞ்சம் ஓங்கி உள்ளது. உக்ரைனை ரஷ்யா பொறுத்திருந்து தாக்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறதோ என்னவோ.. இன்னும் ரஷ்யா தனது முழு பவரை உக்ரைனில் காட்டவில்லை. இதன் காரணமாக தற்போது 6 நாட்களாக நடந்து வரும் போரில் இதுவரை 6000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பீரங்கிகள், ரஷ்ய விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. பலர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய தரப்பிற்குதான் அதிக அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தரப்பு பலி

உக்ரைன் தரப்பு பலி

உக்ரைன் தரப்பில் 14 குழந்தைகள் உட்பட 300 பேர் 6 நாட்களில் கொல்லப்பட்டு உள்ளனர். உக்ரைனின் பெரிய நகரங்கள் எதுவும் ரஷ்யா கட்டுப்பாட்டில் இல்லை. ராணுவம் களத்தில் இருக்கிறது. உக்ரைனை ரஷ்யாவால் பிடிக்க முடியாது. நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கீவ் நகரில் தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக செலன்ஸ்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

    உங்க அணு ஆயுதத்தை தூக்கிட்டுப் போங்க.. America-வுக்கு Russia எச்சரிக்கை
    கட்டுப்பாடு

    கட்டுப்பாடு

    முன்னதாக ரஷ்யா கேர்சன் என்ற பெரிய நகரத்தை உக்ரைனில் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. அதேபோல் பெர்டியான்ஸ்க் என்ற நகரத்தையும் ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. தற்போது கார்கிவில் போர் நடந்து வருகிறது. இந்த போரில் ரஷ்யா பின் வாங்காது. உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தாலும் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தும் என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+