சென்னைதான் வேண்டும்.. கேட்டு வாங்கிய ரஷ்யா.. கையெழுத்தானது சூப்பர் ஒப்பந்தம்.. அடித்தது லக்!

சென்னை மற்றும் ரஷ்யா இடையிலான சரக்கு கப்பல் கடல் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் இன்று செய்யப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Watch Video : Russia opens the gate of the new sea route to Chennai

    மாஸ்கோ: சென்னை மற்றும் ரஷ்யா இடையிலான சரக்கு கப்பல் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் இன்று செய்யப்பட்டது.

    பிரதமர் மோடி தற்போது ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அவர் ரஷ்யா சென்று இருக்கிறார்.

    இன்று காலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் மோடி சந்தித்தார். இதில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான பொருளாதார ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது. அதேபோல் இந்தியா ரஷ்யா ஆகிய நாடுகள் எரிசக்தி துறையில் புதிய ஒப்பந்தங்களை செய்யவும் திட்டமிட்டுள்ளது.

    பல வருடம்

    பல வருடம்

    இதில் பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒப்பந்தம் ஒன்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இன்று சென்னை - ரஷ்யா இடையிலான கடல் போக்குவரத்து ஒப்பந்தம் நிறைவேறியது. பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புடின் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

    மும்பை

    மும்பை

    இந்தியா ரஷ்யா இடையே கடல் போக்குவரத்து மும்பை வழியாக செயிண்ட்ஸ் பீட்டர்ஸ்பர்க் நகரத்திற்கு செய்யப்பட்டு வந்தது. இது 8500 நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு அதிகம் ஆகும். இதற்கு பதிலாக விளாடிவோஸ்டோக் துறைமுகத்தில் இருந்து சென்னைக்கு போக்குவரத்தை தொடங்க ரஷ்யா திட்டமிடப்பட்டு வந்தது.

    குறைவு

    குறைவு

    இதன் தூரம் வெறும் 5600 நாட்டிக்கல் மைல்தான். இதனால் மும்பை கடல் போக்குவரத்தை கைவிட்டுவிட்டு சென்னை போக்குவரத்தை தொடங்க ரஷ்யா ஆலோசனை செய்தது. ஆனால் இதற்கு இந்தியா பெரிய அளவில் முதலில் ஒத்துழைக்கவில்லை.

    என்ன அழுத்தம்

    என்ன அழுத்தம்

    மும்பையில் இருந்து செய்யப்பட்ட அரசியல் அழுத்தங்கள் ஒரு காரணம். ஆனால் தொடர்ந்து ரஷ்யா, சென்னை வழி வணிகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருந்தது. ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்று இன்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இனி மேல் சென்னையை

    இனி மேல் சென்னையை

    இனி ரஷ்யாவிலிருந்து சென்னைக்கு சரக்கு கப்பல்கள் அனுப்பப்படும். இதுவரை மும்பை - ரஷ்யா இடையில் போக்குவரத்து நடந்து வந்தது. மும்பை துறைமுகத்திற்கு பதில் இனி சென்னை துறைமுகம் பயன்படுத்தப்படும். இதை உலகமே உற்றுநோக்க தொடங்கி உள்ளது. இதனால் ரஷ்யா இந்தியா உறவு இன்னும் மேம்படும்.

    விரைவு

    விரைவு

    ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்கு கடல் மூலம் பொருட்களை அனுப்ப 40 நாட்களுக்கும் அதிகமாக ஆனது.. ஆனால் இனி 25 நாட்களுக்கு உள்ளாகவே சென்னைக்கு ரஷ்யாவில் இருந்து பொருட்கள் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இது இரண்டு நாட்டிற்கும் பலன் அளிக்கும்.

    எண்ணெய் வரும்

    எண்ணெய் வரும்

    அதேபோல் சென்னைக்கு இதன் மூலம் அதிகமாக கச்சா எண்ணெய்தான் கொண்டு வரப்படும். சென்னையில் இருந்துதான் இனி அதிக அளவு கச்சா எண்ணெய் மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். இது சென்னையை இந்தியாவில் மிக முக்கியமான நகரமாக தற்போது மாற்றியுள்ளது.

    வேலை வாய்ப்பு

    வேலை வாய்ப்பு

    அதேபோல் சென்னையில் இதனால் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படும். மும்பையில் இயங்கி வந்த சில நிறுவனங்கள் சென்னைக்கு மாற்றப்படும். அதேபோல் ஓஎன்ஜிசி சார்ந்த எண்ணெய் சார்பு நிறுவனங்கள் பல சென்னைக்கு வரும். இதனால் சென்னையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+