Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஹை அலர்ட்!" அணு ஆயுத தடுப்பு படையினருக்கு.. அதிபர் புதின் பிறப்பித்த முக்கிய உத்தரவு! அடுத்து என்ன

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் 4ஆவது நாளாகப் போர் தொடரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் இப்போது பிறப்பித்துள்ள உத்தரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது கடந்த வியாழக்கிழமை ரஷ்யா போர் தொடுத்தது. அதிபர் புதின் உத்தரவின்படி முழு வீச்சிலான ராணுவ நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் தொடங்கியது.

மூன்று நாட்களைக் கடந்தும் போர் தொடரும் நிலையில், ரஷ்யப் படைகளுக்கு அஞ்சாமல் உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நகர் தொடங்கிப் பல முக்கிய நகரங்களிலும் சண்டை தொடர்கிறது.

 பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இந்தச் சூழலில் அண்டை நாடான பெலாரஸ் நாட்டில் வைத்து உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக உள்ளதாக ரஷ்யா அறிவித்தது. பேச்சுவார்த்தை நடத்த ஒப்புகொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,முதலில் பெலாரஸ் நாட்டில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த மறுப்பு தெரிவித்தார். இருப்பினும், இதற்கு ரஷ்யா ஒப்புக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இந்தச் சூழலில் பெலராஸ் நாட்டில் வைத்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளதாக ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.

 ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்ய அதிபர் புதின்

இந்தச் சூழலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், நாட்டின் அணு ஆயுத தடுப்பு படையினர் ஹைஅலர்ட் நிலையில் இருக்குமாறு தனது ராணுவ தளபதிகளுக்கு உத்தரவிட்டார். மேற்கு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் அதிபர் புதின், ராணுவ தளபதிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் குற்றம் சாட்டினார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் இந்தப் போர் காரணமாக ஏற்கனவே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், புதினின் இந்த உத்தரவு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

 திடீர் உத்தரவு

திடீர் உத்தரவு

ராணுவ தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகள் உடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், "ரஷ்ய ராணுவத்தின் தடுப்புப் படைகளைச் சிறப்புப் போர் சேவையில் ஈடுபடுத்துமாறு பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ரஷ்ய ஆயுதப் படையின் தலைவருக்கு உத்தரவிடுகிறேன். பொருளாதார ரீதியில் நம்மைப் பாதிக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் நம் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. இது சட்டவிரோதத் தடைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை.

 அடுத்து என்ன

அடுத்து என்ன

நேட்டோ அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள முக்கிய நாடுகளின் மூத்த அதிகாரிகளும் கூட நமது நாட்டிற்கு எதிராகக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எனவே, நாட்டின் அணு ஆயுத தடுப்பு படையினர் ஹைஅலர்ட் நிலையில் இருக்க வேண்டும். இதை ராணுவ தளபதிகள் உறுதி செய்ய வேண்டும்" என்று புதின் உத்தரவிட்டுள்ளார். இரு நாடுகளும் பெலராஸ் நாட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், புதினின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து 35 நாடுகளைக் கொண்ட சர்வதே அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐ.நாவின் சர்வதேச அணுசக்தி முகமை வரும் புதன்கிழமை அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

 தொடரும் போர்

தொடரும் போர்

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய உக்ரைன் போர், உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உக்ரைன் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து ரஷ்யப் படைகளைத் தாக்குதலைத் தொடங்கியது. இருப்பினும், ரஷ்யப் படைகளைக் கண்டு துளியும் அஞ்சாமல் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது. குறிப்பாக சில இடங்களில் ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளைக் கூட உக்ரைன் வீரர்கள் மீண்டும் மீட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+