செக்ஸ் அமைச்சகத்தை உருவாக்குகிறது ரஷ்யா! மக்கள் தொகையை அதிகரிக்க புதிய முயற்சி!
மாஸ்கோ: ரஷ்யாவில் மக்கள் தொகை வேகமாக சரிந்து வருகிறது. இப்படி இருக்கையில், இதனை அதிகரிக்க 'பாலியல் அமைச்சகத்தை' (ministry of sex) உருவாக்க அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என மிரர் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.
உலகம் முழுவதும் மக்கள் தொகை வேகமாக சரிய தொடங்கியுள்ளது. மக்கள் குழந்கைளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே உலக நாடுகள் பெரும் நெருக்கடியில் இருக்கின்றன. ரஷ்யாவும் இந்த நெருக்கடியால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் உடனடியாக மக்கள் தொகையை அதிகரிக்கவும், குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்தவும் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பணி நேரங்களில் கிடைக்கும் இடைவெளியிலும், லஞ்ச் டைம்களிலும் கூட செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள் என்று ரஷ்ய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொள்பவர்களுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டிருக்கிறது. இவை அனைத்தும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் என அந்நாட்டு அதிகாரிகள் நம்புகின்றனர். அந்த வகையில் புதியதாக 'பாலியல் அமைச்சகத்தை' தொடங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருவதாக மிரர் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது. ரஷ்ய நாடாளுமன்றக் குழுவின் தலைவியான நினா ஒஸ்தானினா தலைமையில் இந்த அமைச்சகம் அமைய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த அமைச்சகம் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும். உதாரணமாக இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணி வரை நாடு முழுவதும் இன்டெர்நெட் கனெக்ஷனை முடக்க இந்த அமைச்சகம் முன்மொழியும். இதன் மூலம் ஆண்-பெண் இடையே உரையாடல் அதிகரிக்கும், இது இருவரின் உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதேபோல வீட்டிலேயே முடங்கி இருக்கும் பெண்களுக்கு, ஊதியம் வழங்கவும் திட்டமிடப்பட்டிக்கிறது.
அதாவது திருமணமான பெண் வீட்டில் இருக்கிறார் எனில், அவர் குடும்பத்தை பேணி பராமரிக்கிறார் என்று அர்த்தம். அதுவும் ஒரு உழைப்புதான். குடும்ப தலைவியின் உழைப்பு இல்லாமல் குழந்தைகள் வளர்வதில்லை. எனவே அவர் செய்யும் பணிக்காக மாதம் ரூ.5000 வரை வழங்கவும், குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு மாதம் ரூ.26,000 வரை வழங்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
தவிர, புதியதாக திருமணமானவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பம் இருந்தால் அவர்களுக்கான ஹனிமூனை ரஷ்ய அரசே செய்து கொடுக்கும். குறிப்பாக அவர்கள் தங்கும் ஹோட்டலின் செலவை அந்நாட்டு அரசு ஏற்றுக்கொள்ளவும் இந்த அமைச்சகம் பரிதுரைகளை வைக்க இருக்கிறது.
மேலும் நாடு முழுவதும் பெண்களிடையே சில முக்கிய கேள்விகளை வைத்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது. அதாவது,
-நீங்கள் எப்போது பாலியல் செயல்பாடுகளை தொடங்கினீர்கள்?
-கருத்தடை மாத்திரை அல்லது ஆணுறையை பயன்படுத்துகிறீர்களா?
-உடலுறவின் போது உங்களுக்கு வலி அல்லது இரத்தப்போக்கு ஏற்படுமா?
-இதற்கு முன் கருவுற்றிருக்கிறீர்களா? எத்தனை முறை?
-உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? அல்லது அதற்கா ஏதேனும் திட்டமிட்டிருக்கிறீர்களா?
என்கிற கேள்விகளை அடங்கிய தாள் அரசு துறையில் இருக்கும் பெண்ளுக்கு கொடுக்கப்பட்டு விடைகள் கேட்டு பெறப்பட்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
ஒருபுறம் இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் தொகைக்கு ஏற்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. மறுபுறம் எல்லா வசதிகளும் இருந்தும், மக்கள் தொகை ரஷ்யா போன்ற நாடுகளில் வேகமாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications