அதிபர் அஷ்ரப் கானியை விட தலிபான்கள் கையில் சிறப்பாக உள்ள ஆப்கானிஸ்தான்.. ரஷ்யா புகழாரம்
மாஸ்கோ: ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் ஆட்சியை விட தலிபான்களின் பிடியில் சென்றுள்ள அந்த நாடு தற்போது சிறப்பாக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காபூலை பாதுகாப்பான பகுதியாக மாற்றிவிட்டார்கள் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில் அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டு அதிபர் அஷ்ரப் கானி தப்பியோடிவிட்டார். இதையடுத்து முன்னாள் அதிபர் வீட்டுமுன்னர் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அது போலே அமெரிக்க படைகள் வெளியேறுவதை கண்டித்து அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பும் மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் தலிபான்களை எதிர்த்து ஆப்தானிஸ்தானே போராடாதபோது அமெரிக்க படைகள் ஏன் போராடி உயிரிழக்க வேண்டும். அதனால் படைகள் வாபஸ் பெறும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க அதிபர் ஜோபிடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான்
இதுகுறித்து ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்ய தூதர் டிமிட்ரி ஜிர்னோவ் நேற்றைய தினம் மாஸ்கோ வானொலியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுகிறது. காபூலும் பாதுகாப்பாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காபூலை பாதுகாப்பானதாக தலிபான்கள் மாற்றிவிட்டனர்.

தலிபான்கள்
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தலைமையில் இருந்ததை விட தலிபான்கள் பிடியில் சிறப்பாக உள்ளது. அவர்களது அணுகுமுறை நன்றாக உள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அஷ்ரப் கானி தப்பிவிட்டார். இது மிகவும் இழிவானது. தலிபான்கள் காபூலில் நுழைந்தவுடனேயே அரசையும் அமெரிக்க படைகளையும் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

ரஷ்ய தூதரகம்
மேலும் ரஷ்ய தூதரகத்தை சுற்றியுள்ள பகுதிகளை தலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதனால் ரஷ்ய அதிகாரிகள் 100 பேர் சிக்கியுள்ளனர். அவர்களது பாதுகாப்பு குறித்து தலிபான்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். அது போல் அஷ்ரப் மின்னல் வேகத்தில் நாட்டை விட்டு தப்பியதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

தப்பியோடிய அஷ்ரப் கானி
அஷ்ரப் கானி தப்பும் போது ஹெலிகாப்டர் நிறைய பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டார். இது மிகவும் இழிவான செயல் என்றும் இன்னமும் ஹெலிகாப்டரில் கொண்டு வரும் அளவுக்கு பணங்கள் ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும் அவற்றையும் சேர்த்து எடுக்க முடியாத கானி ஒரு ஹெலிகாப்டர் முழுவதும் பணத்தை எடுத்துக் கொண்டு வந்துவிட்டதாகவும் ரஷ்யா தெரிவிக்கிறது. நாட்டை விட்டு தப்பியதற்கு அஷ்ரப் கானிக்கு ரஷ்ய அதிபர் புடினின் சிறப்பு பிரதிநிதி ஜமீர் கபுலோவ், கானி நாட்டை விட்டு ஓடி வந்தது தவறு. அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications