நோ ஃப்ளை ஜோன் உருவாக்க நேட்டோ மறுப்பு... 9 நாட்களாக நாங்கள் ரத்தம் சிந்துகிறோம் - ஜெலன்ஸ்கி
தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக்கோரி உக்ரைன் விடுத்த கோரிக்கையை நேட்டோ நிராகரித்துள்ளது.
உக்ரைனால் தாக்குப்பிடிக்க முடியாவிட்டால் பிற ஐரோப்பிய நாடுகளாலும் தாக்குப்பிடிக்க முடியாது. உக்ரைன் மக்கள் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராகப் போராடுவார்கள் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
கீவ்: தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக்கோரி உக்ரைன் அதிபர் விடுத்த கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்துள்ளது. தாங்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நேட்டோ அமைப்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைனால் தாக்குப்பிடிக்க முடியாவிட்டால் பிற ஐரோப்பிய நாடுகளாலும் தாக்குப்பிடிக்க முடியாது. உக்ரைன் மக்கள் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராகப் போராடுவார்கள் என்று கூறியுள்ளார் ஜெலன்ஸ்கி.
உக்ரைன் மீது 10வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷ்ய படைகள் தரைவழி, வான்வெளி தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகின்றன.

நோ ஃப்ளை ஜோன்
இதற்கிடையில், தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக்கோரி நேட்டோ அமைப்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார். 'உக்ரைன் வான்பரப்பில் பறக்கத்தடை' என்று நேட்டோ அறிவிக்க வேண்டும் என ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையை நேட்டோ ஏற்று உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்கத்தடை என அறிவித்தால், பயணிகள் விமானம், சரக்கு விமானம், போர் விமானம் என எந்த வித விமானங்களும் உக்ரைன் வான்பரப்பில் பறக்கக்கூடாது. இது ரஷிய போர் விமானங்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க உதவும். மேலும், இந்த தடையை மீறிய எந்த விமானங்களையும் நேட்டோ படைகள் சுட்டுவீழ்த்தலாம் என்று கூறியிருந்தார்.

நேட்டோ மாறுப்பு
ஆனால், தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக்கோரி உக்ரைன் அதிபர் விடுத்த கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய நேட்டோ தலைவர் ஸ்டோலன்பெர்க் கூறுகையில், வான்பரப்பில் பறக்கத்தடை நடைமுறையை அமல்படுத்த ஒரேஒரு வழி மட்டுமே உள்ளது. அது என்னவென்றால் நேட்டோ போர் விமானங்களை உக்ரைன் வான் எல்லைக்குள் அனுப்பி ரஷ்ய போர் விமானங்களை சுட்டுவீழ்த்தி 'விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி' என அறிவிப்பது தான் இதற்கான வழி.

பெருமளவு மனித இழப்பு
நாம் அதை செய்தால் அது அதிக நாடுகளை உள்ளடக்கி, பெருமளவு மனித இழப்புகளை ஏற்படுத்தி ஐரோப்பாவை முழுமையான போருக்கு கொண்டு செல்லும் என கூறினார். இதனையடுத்து உக்ரைன் விடுத்த கோரிக்கையை நிராகரித்து விட்டார். இந்நிலையில், தாங்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நேட்டோ அமைப்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மறைமுக பச்சைக்கொடி
நேட்டோ அமைப்பிற்கு எதிராக கடுமையாக பேசிய ஜெலன்ஸ்கி, இன்றிலிருந்து முதல் உக்ரைனில் உயிரிழக்கும் ஒவ்வொரு நபரின் மரணத்திற்கும் நேட்டோவின் பலவீனமும், ஒற்றுமையின்மையும் தான் காரணமாக இருக்கும். உக்ரைனின் நகரங்களிலும் கிராமங்களிலும் ரஷ்ய குண்டு மழையைப் பொழிய நீங்கள் பச்சைக் கொடி காட்டியுள்ளீர்கள். ஆம், நீங்கள் நோ ஃப்ளை ஜோன் உருவாக்க மறுப்பதால் அவர்களுக்கு மறைமுகமாக பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது.

ரத்தம் சிந்துகிறோம்
நேட்டோ குழுமம் எங்களுக்குச் செய்த ஒரே உதவி 50 டன் டீசலை உக்ரைனுக்கு அனுப்பியது மட்டுமே. இதைவைத்து புடாபெஸ்ட் நினைவுச் சின்னத்தை எரிக்கலாம் என நினைத்தார்கள் போலும். பொதுவான ஐரோப்பாவுக்காக நாங்கள் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறோம். லிட்டர் கணக்கிலான ரத்தத்திற்கு மாற்றாக டீசல், பெட்ரோலைக் கொடுத்து சரிக்கட்ட முடியாது.
Recommended Video

யாராலும் தாக்குப்பிடிக்க முடியாது
உக்ரைனால் தாக்குப்பிடிக்க முடியாவிட்டால் பிற ஐரோப்பிய நாடுகளாலும் தாக்குப்பிடிக்க முடியாது. உக்ரைன் மக்கள் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராகப் போராடுவார்கள். 9 நாட்களாக நாங்கள் இருளையும், கொடுமையையும் தாக்குப்பிடித்துள்ளோம். நாங்கள் ஒளியின் போராளிகள். ஐரோப்பிய வரலாறு இதை என்றும் நினைவுகொள்ளும் என்று ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications