41 உயிர்களை பலி கொண்ட ரஷ்ய விமான விபத்திற்கான காரணம்.. விமானி திடுக் தகவல்!
Recommended Video
மாஸ்கோ: மின்னல் தாக்கியதே ரஷ்ய விமான விபத்திற்கு காரணம் என அதன் விமானி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஷெர்மெட்யேவ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முர்மான்க்ஸ் நகரத்துக்கு 'சுகோய் சூப்பர்ஜெட் 100' ரக விமானம் 73 பயணிள் மற்றும் விமான ஊழியர்கள் 5 பேருடன் புறப்பட்டு சென்றது.
விமானம் புறப்பட்டு பறக்க தொடங்கிய சில நிமிடங்களில், விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதை அறிந்த விமானி, விமானத்தை மீண்டும் ஷெர்மெட்யேவ் விமானநிலையத்துக்கு திருப்பி, அவசரமாக தரையிறங்க அனுமதி கோரினார். விமானநிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

விமானத்தை சூழ்ந்த தீ
அதன்படி தரையிறங்கியபோது, விமானத்தில் தீப்பிடித்தது. இதற்கிடையில் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையில் வேகமாக சென்றது. இதனால் தீ வேகமாக பரவி விமானத்தின் பாதியளவுக்கு தீ சூழ்ந்தது.

அவசர வழி
விமானத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ அந்தப்பகுதி முழுவதையும் சூழந்தது. ஒருகட்டத்துக்கு பின்னர் விமானி போராடி விமானத்தை நிறுத்திவிட்டார். அதனை தொடர்ந்து, விமானத்தின் முன்பகுதியில் உள்ள அவசர வழி மூலம் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

41 பேர் பலி
இருப்பினும் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், அனைத்து பயணிகளையும் அவர்களால் வெளியேற்ற முடியவில்லை. தீயின் கோர நாக்குகளுக்கு 2 குழந்தைகள், 2 விமான ஊழியர்கள் உள்பட 41 பேர் பலியாயினர்.

மின்னல் தாக்கியதே..
உயிர் தப்பிய 37 பேரில் 11 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் விமான விபத்திற்கான காரணத்தை அதன் விமானி கூறியுள்ளார். அதாவது விமானத்தை மின்னல் தாக்கியதாலேயே அவசரமாக தரையிறக்கியதாகவும், இருந்தபோதும் விமானத்தில் தீப்பிடித்து விட்டதாகவும் விமானி கூறியுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications