3ம் உலகப்போரை பற்ற வைத்த உக்ரைன்.. ரஷ்ய ராணுவ ஜெனரலை போட்டு தள்ளிய உளவுத்துறை! புதின் டென்ஷன்
மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில், தற்போது போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவின் உயர்மட்ட ராணுவ ஜெனரல் கார் குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலைக்கு உக்ரைன் உளவுத்துறைதான் காரணம் என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
மாஸ்கோவில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில், ரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல் ஃபானில் சர்வாரோவ் (56) கொல்லப்பட்டிருக்கிறார். ரஷ்ய ஆயுதப் படைகளின் செயல்பாட்டுப் பயிற்சித் துறையின் தலைவரான சர்வாரோவ், இன்று காலை இவரது காருக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் மரணமடைந்தார் என புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

என்ன நடந்தது?
மாஸ்கோவின் தெற்குப் பகுதியில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே இன்று காலை இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இவரது காரில் குண்டு வைக்கப்பட்டிருந்த நிலையில், இவர் காரை ஸ்டார்ட் செய்திருக்கிறார். செய்தவுடன் கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இந்த குண்டுவெடிப்பு உக்ரைனிய உளவுத்துறையின் சதி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக குழு தெரிவித்துள்ளது. உக்ரைன் இது குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
யார் இந்த ஜெனரல்?
இவர், 1990 மற்றும் 2000-களின் தொடக்கத்தில் செச்சன் போர் மற்றும் ஒசேஷிய-இங்குஷ் மோதல்களில் பங்கேற்றவர். 2015-2016 காலகட்டத்தில் சிரியாவில் நடந்த ராணுவ நடவடிக்கைகளுக்கும் தலைமை தாங்கிய அனுபவம் மிக்கவர். இவர் ரஷ்ய ஆயுதப் படைகளின் செயல்பாட்டுப் பயிற்சித் துறையின் தலைவராவார். ஒரு ராணுவம் எப்படிப் போரிட வேண்டும், வீரர்களுக்கு என்ன மாதிரியான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும், மற்றும் புதிய போர் வியூகங்களை உருவாக்குவது இவருடைய பொறுப்பாகும்.
சர்வாரோவ் ஏன் முக்கியமானவர்?
முக்கியமான விஷயம் இவர் மேஜையில் அமர்ந்து கொண்டு உத்தரவிடும் அதிகாரி கிடையாது. நேரடியாக களத்தில் இறங்கி செயல்படுபவர். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக புதியதாக சேர்ந்த வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பது, போர் முனையில் ஏற்படும் பின்னடைவுகளை சரி செய்வதில் கவனம் செலுத்துகிறது. இந்த அனைத்து விஷயங்களுக்கும் மூளையாக செயல்பட்டவர்தான் இந்த சர்வாரோவ். இவரை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வைத்து கொலை செய்ததால், உக்ரைன் தனது பலத்தை நிரூபித்திருக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications