
பிளானே வேற! "அவர்" இருந்ததால் தான் எல்லாம் முடியும்! தீர்த்துக்கட்ட ரஷ்ய உளவு துறை போட்டுள்ள பிளான்
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்து சமீப காலமாகத் தகவல் வெளியாகி வரும் நிலையில், அங்கு நடைபெறும் சம்பவங்கள் குறித்து ரஷ்யா பற்றி நன்கறிந்த வல்லுநர் ஒருவர் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையாகி உள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். மாதம் முதலே ரஷ்யாவின் போர் நடத்தி வருகிறது. இந்தப் போர் 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இன்னும் கூட சண்டை முடியவில்லை.
இதர பகுதியில் போர் குறைந்துள்ள போதிலும், உக்ரைன் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நகரங்களைக் குறித்து வைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
கர்ப்பமான ரகசிய காதலி! 69 வயதில் தந்தையாகும் விலாடிமிர் புதின்? உக்ரைன் போருக்கு இடையே பரபரப்பு!

புதின் உடல்நிலை
உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியவில்லை. அதேநேரம் மறுபுறம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காகக் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நடந்த சில சம்பவங்கள் ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது.

புற்றுநோய்
இதனிடையே புதின் கனைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகச் சமீபத்தில் தகவல் வெளியானது. 69 வயதாகும் புதினின் கனைய புற்றுநோய் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் இதற்காக விரைவில் அவருக்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டி இருக்கும் என்றும் கூறப்பட்டது. இதற்காக மாஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவனை அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

மிக மோசம்
மேலும், புதினுக்கு உடல்நிலை மோசமாக இருப்பதால் விரைவாக இந்த ஆப்ரேஷன் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. இது மிகவும் சிக்கலான ஒரு அறுவை சிகிச்சை என்பதால் புதினுக்கு எதாவது ஏற்பட்டால் நிலைமையைச் சமாளிக்கவும் ரஷ்யாவை நிர்வகிக்கவும் சிறப்பு கவுன்சில் ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் வரை இந்த இடைக்கால அமைப்பிடம் தான் ரஷ்யாவின் ஒட்டுமொத்த கண்ட்ரோலும் இருக்கும் எனக் கூறப்பட்டது.

உளவு துறை
இதனிடையே புதின் உடல்நிலையைப் பயன்படுத்தி அவரை ரஷ்ய உளவுத் துறையே கொலை செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் விவகாரத்தில் புதின் சற்று மென்மையாக நடந்து கொள்வதாகவும் இதனால் அவரை நீக்க ரஷ்ய உளவுத் துறை திட்டமிட்டுள்ளதாகவும் கிங்ஸ் கல்லூரியின் பாதுகாப்பு ஆய்வுக் கல்வியாளர் டாக்டர். ராபர்ட் தோர்ன்டன் தெரிவித்துள்ளார். இருக்கும் நிலைமையை ரஷ்ய உளவுத் துறை எளிதாகப் பயன்படுத்தக் கூடும் என்று ராபர்ட் தோர்ன்டன் தெரிவித்தார்.

செய்வார்கள்
இது குறித்து டாக்டர். ராபர்ட் தோர்ன்டன் மேலும் கூறுகையில், "கீவ் நகரில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கி உள்ளது. இப்போது டான்பாஸ் பகுதியில் மட்டுமே சண்டை நடைபெறுகிறது. இப்போது புதின் உடல்நிலையைப் பயன்படுத்தி, அவரை நீக்கவும் கூட முயலலாம். அதைச் செய்வதற்கான புத்திசாலித்தனமும் அவர்களிடம் உள்ளது. நீங்கள் ஒரு சதியை நடத்த விரும்பினால், நீங்கள் அதை மிகவும் ரகசியமாகவும் மிகவும் அமைதியாகவும் வைத்திருக்க விரும்புகிறீர்கள். வரும் நாட்களில் அதுவும் கூட நடக்கலாம்.

ரஷ்ய உளவு துறை
அவரை நீக்கிய பிறகு, ஒட்டுமொத்த அதிகாரமும் ரஷ்யக் கட்டுப்பாட்டில் எளிதாக வந்துவிடும். முதலில் தற்காலிகமாக அவரை நீக்குவார்கள். அதன் பின்னர் புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும் இதனால் சிறப்பு ராணுவ நடவடிக்கை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதாகவும் கூறுவார்கள். உயிரிழந்துவிட்டாலும் கூட உடல்நிலை சரி இல்லை என்றே கூறுவார்கள்" என்றார்.

புதின்
இருப்பினும், புதினையும் சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது. சாதாரண ஒரு உளவுத் துறை அதிகாரியாக இருந்து இப்போது இந்தளவுக்கு உயர்ந்து உள்ளார் என்றால், அதற்கு முக்கிய காரணம் அவரது புத்திசாலித்தனம் தான்! எனவே, இதில் யார் கை ஓங்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.