ரஷ்ய பெண்கள் 8 குழந்தைகளாவது பெற்றெடுக்கனும்.. புதின் வைத்த திடீர் வேண்டுகோள்.. இப்படி ஒரு காரணமா?
மாஸ்கோ: ரஷ்யாவில் பெண்கள் குறைந்தது 8 குழந்தைகளாவது பெற்று எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்யாவில் பிறப்பு விகிதம் சரிந்து வரும் சூழலில் இந்த வேண்டுகோளை புதின் வைத்துள்ளர்.
உலக அளவில் பரப்பளவில் மிகப்பெரிய நாடு ரஷ்யாதான். இந்த நாட்டின் மக்கள்தொகை 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 14.34 கோடியாக உள்ளது. 1990 களில் இருந்தே ரஷ்யாவின் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. இது ஒருபக்கம் என்றால் போர் உள்ளிட்ட காரணங்களால் அந்நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரஷ்யாவில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் வரும் காலங்களில் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், ரஷ்ய அதிபர் புதின் அந்த நாட்டு மக்கள் குறைந்தது 8 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தலைநகர் மாஸ்க்வோவில் நடைபெற்ற ரஷ்யவின் மக்கள் கவுன்சில் கூட்டத்தில் உரை நிகழ்த்திய அந்நட்டு அதிபர் புதின் இது தொடர்பாக கூறியதாவது:-

மக்கள் தொகை: நமது பல இனக் குழுக்கள் 4 அல்லது ஐந்து குழந்தைகள் அல்லது அதற்கு மேல் என்ற மரபை பாதுகாத்து வந்தன. நமது மூதாதையர்கள் 8 அல்லது அதற்கு மேலான குழந்தைகளை பெற்றெடுத்தனர் என்பதை ரஷ்ய குடும்பங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த சிறந்த மரபுகளைப் பாதுகாக்க வேண்டும். மீண்டும் புத்துயிர் பெற செய்ய வேண்டும். பெரிய குடும்பஙக்ள் என்பது ஒரு விதியாக மாற வேண்டும்.
அனைத்து ரஷ்ய மக்களுக்கும் ஒரு வாழ்க்கை முறையாக இது அமைய வேண்டும். குடும்பம் என்பது நமது நாடு மற்றும் சமூகத்திற்கான அடித்தளம் மட்டும் இல்லை. இது ஒரு இது ஒரு ஆன்மீக நிகழ்வு மட்டும் இன்றி ஒழுக்கத்தின் ஆதாரமாகவும் உள்ளது. வரும் தசாப்தங்கள் மற்றும் அடுத்துள்ள தலைமுறையினருக்கு ரஷ்யாவின் மக்கள் தொகையை பாதுகாப்பதும் அதிகரிப்பதும் இலக்காக இருக்க வேண்டும்.
8 குழந்தைகள் பெற்க வேண்டும்: எனவே தொழிலாளர் பற்றாக்குறையை சரி செய்வதற்காக நாட்டின் மக்கள் தொகையை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு ஆகும். எனவே இனிவரும் காலங்களில் ரஷியாவில் உள்ள பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 8 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இதன்மூலம் நாட்டின் 1,000 ஆண்டு கால பாரம்பரியத்தை பாதுகாக்க முடியுமம்" என்றார்.
இந்தியா, சீனா போன்ற உள்ளிட்ட நாடுகள் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின், மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும் என்று பேசியிருப்பது சர்வதேச அளவிலும் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications