பின்வாங்க வாய்ப்பே இல்லை! உக்ரைன் போர் "உன்னதமான" நோக்கங்களை ரஷ்யா அடையும்! விளாடிமிர் புடின் உறுதி
மாஸ்கோ : உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு அதன் "உன்னதமான" நோக்கங்களை அடையும் என்றும், ரஷ்ய மொழி பேசும் டான்பாஸ் பகுதியைப் பாதுகாக்கும் முயற்சியில் படையெடுப்பைத் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை என ரஷ்ய அதிபர் விளடிமிர் புடின் கூறியுள்ளார்.
நேட்டொ மற்றும் டான்பாஸ் பகுதிகளை காரணம் காட்டி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ராணுவம் கடந்த பிப்ரவரி மாதத்தில் போரை தொடங்கிய நிலையில், 45 நாட்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உக்ரைன் மீது உடனான ரஷ்யாவின் போரால் உக்ரைன் நாட்டில் இருந்து சுமார் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர். இதனால் அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது

உக்ரைன் போர்
போரை நிறுத்த பல்வேறு உலக நாடுகளும் கோரிக்கை விடுத்த நிலையில் ரஷ்யா அதனை மறுத்து வருகிறது. குறிப்பாக ஐநா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்து விட்டது. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு அதன் "உன்னதமான" நோக்கங்களை அடையும் என்றும், ரஷ்ய மொழி பேசும் டான்பாஸ் பகுதியைப் பாதுகாக்கும் முயற்சியில் படையெடுப்பைத் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை என ரஷ்ய அதிபர் விளடிமிர் புடின் கூறியுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளடிமிர் புடின்
பெலாரஷ் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடன் பேசிய புடின், உக்ரைனுடனான மோதல் தவிர்க்க முடியாததாகிவிட்டதாகவும், ரஷ்ய மொழி பேசும் டான்பாஸ் பகுதியைப் பாதுகாக்கும் முயற்சியில் படையெடுப்பைத் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று புதின் கூறினார். படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 10 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது. ஆனால், உக்ரைனின் பிரிவினைவாதப் பகுதிகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனது படைகள் உதவுகின்றன என்று புடின் கூறினார்.

வேறு வழியில்லை
"ஒருபுறம், நாங்கள் மக்களுக்கு உதவுகிறோம், காப்பாற்றுகிறோம், மறுபுறம், நாங்கள் ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம், எங்களுக்கு வேறு வழியில்லை என்பது தெளிவாகிறது. இது சரியான முடிவு இலக்குகள் முற்றிலும் தெளிவாக உள்ளன, அவை உன்னதமானவை. என்றார். இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய மொழி பேசுபவர்களுக்கு எதிராக உக்ரைன் இனப்படுகொலை செய்ததாக ரஷ்யா கூறும் நிலையில், அவ்வாறு இருப்பதாகக் கூற எந்த ஆதாரமும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உன்னத நோக்கம்
உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடைகளால் ரஷ்ய பொருளாதாரம் அதிர்ந்துள்ளது. இருப்பினும், ரஷ்ய அதிபர் புடின், ரஷ்யா தனிமைப்படுத்தப்பட விரும்பவில்லை, நவீன உலகில் யாரையும் கடுமையாக தனிமைப்படுத்துவது சாத்தியமில்லை - குறிப்பாக ரஷ்யா போன்ற பரந்த நாடுகளை எதுவும் செய்ய முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications