உச்சத்தில் உக்ரைன் போர்.. 24 ஆண்டுகளுக்கு பின் வடகொரியாவுக்கு சென்ற புதின்! உற்று நோக்கும் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

பியாங்யாங்: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு, வடகொரியா ஆயுதங்களை சப்ளை செய்வதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், 24 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய அதிபர் புதின் இன்று வடகொரியாவுக்கு சென்றிருக்கிறார். இந்த விவகாரம் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

சோவியத் ரஷ்யா இருந்த காலத்தில் அதற்கு எதிராக உருவாக்கப்பட்டதுதான் நேட்டோ. ரஷ்யாவுடன் அப்போது பல நாடுகள் இணைந்திருந்தன. எனவே, இதனை தடுக்கும் நோக்கிலும், தங்களுக்கு என புதிய ராணுவ கூட்டாளிகளை உருவாக்கும் நோக்கிலும் அமெரிக்கா நேட்டோவை உருவாக்கியது. ஆனால், சோவியத் வீழ்ந்து ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னமும் நேட்டோ கலைக்கப்படவில்லை. அதேபோல முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோ தன்னுள் இழுத்து வருகிறது.

Putin Kim Jong Un North Korea Russia

இது ரஷ்யாவுக்கு பெரும் தலைவலியை உருவாக்கிவிட்டது. அமெரிக்காவின் நேட்டோ படைகள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, உக்ரைன் பக்கம் வந்துவிட்டது. உக்ரைன் ரஷ்யாவின் அண்டை நாடு. இந்த நாட்டை நேட்டோவில் இணைத்துவிட்டால் அந்நாட்டின் எல்லையில் அமெரிக்கா படைகளை நிறுத்திக்கொள்ளலாம். இது ரஷ்யாவின் இறையான்மைக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிடும். எனவே இது குறித்து ஏற்கெனவே புதின் எச்சரித்திருந்தார்.

இந்த எச்சரிக்கையை மீறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நேட்டோவில் இணைய ஒப்புக்கொண்டார். இந்த புள்ளிதான் ரஷ்யா-உக்ரைன் போருக்கான தொடக்கம். 2022ல் தொடங்கிய போர் அடுத்த 6 மாதங்களில் முடிவடைந்து விடும் என்று ரஷ்யா நம்பியது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து உக்ரைனுக்கு ஏராளமான ஆயுத உதவிகளை செய்தது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போர் நீடித்து வருகிறது.

அதேபோல ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுத உதவி செய்வதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளது. ஆனால், இதனை இரண்டு நாடுகளும் மறுத்திருக்கின்றன. இந்த சூழலில் தான் ரஷ்யா அதிபர் புதின் வடகொரியா சென்றிருக்கிறார்.

கடந்த 24 ஆண்டுகளுக்கு பின்னர் இன்றுதான் முதன் முறையாக புதின் வடகொரியா சென்றிருக்கிறார். அவருக்கு அங்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இன்று அதிகாலை பியோங்யாங்கில் உள்ள விமான நிலையத்தில் புதின் தரையிறங்கினார். புதினை வரவேற்க வடகொரியா கிங் ஜாங் உன் வந்திருந்தார்.

அங்கிருந்து அருகில் இருந்த அரசு விருந்தினர் மாளிகைக்கு புதின் அழைத்து செல்லப்பட்டார். வழி நெடுகிலும் அவருடைய உருவப்படத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதேபோல கிம் இல் சுங் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் வடகொரிய வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த சந்திப்பு குறித்து,

"இரு நாடுகளின் உறவுகள், சர்வதேச நீதி, அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினார்கள். மேலும் அமெரிக்கா ஆதிக்கம், சார்ப்பு அல்லாத புதிய கூட்டணியை உருவாவது தொடர்பாகவும் பேசப்பட்டிருக்கிறது" என ரஷ்யாவின் அரசு ஊடகம் தெரிவித்திருக்கிறது. 24 ஆண்டுகளுக்கு பின்னர் ரஷ்ய அதிபர் வடகொரியாவுக்கு சென்றிருப்பது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. ஆயுத சப்ளையை அதிகரிக்கவே இந்த பயணம் என்று அமெரிக்கா ஆதரவு நாடுகள் விமர்சித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+