உக்ரைன் தலைநகரை சுற்றி வளைக்கும் திட்டம்.. கேர்சன் பகுதியைக் கைப்பற்றி கொடிநாட்டிய ரஷ்யா!
மாஸ்கோ: உக்ரைனில் உள்ள கேர்சன் பகுதியைக் கைப்பற்றி இருக்கிறது ரஷ்யா. கைப்பற்றியதோடு, அங்கு கொடியேற்றியுள்ளது ரஷ்யா.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத்தொடங்கி ஒரு நாள் ஆகியுள்ளது. இந்நிலையில், இருதரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். அதிகமான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.
உக்ரைனின் கிரிமா பகுதியைக் கைப்பற்றியதில் இருந்து, உக்ரைனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷ்யா எண்ணியது. ஆனால், உக்ரைன் நேட்டோவோடு இணைய விரும்பியது.

ஆக்கிரமிப்பு
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து இரண்டாவது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவை குறிவைத்து சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்குள் தொடர்ந்து முன்னேறி வருகிறது ரஷ்யா. "ரஷ்ய படைகள் செர்னோபில் பகுதியில் உள்ள அணு ஆலையை மீண்டும் கைப்பற்ற முயல்கின்றன. 1986இல் நிகழ்ந்ததை போல ஒரு பேரழிவு நடக்காமல் இருக்க நமது வீரர்களை தங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுகிறார்கள். இது தொடர்பா சுவீடன் பிரதமரிடம் தெரிவித்துள்ளேன். இது ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் எதிரான போர்ப் பிரகடனம்" என்று உக்ரைன் அதிபர் தெரிவித்தார்.

செர்னோபில்
செர்னோபில் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சண்டை நடைபெற்று வருவதைச் சர்வதேச செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. இதையடுத்து செர்னோபில் பகுதியை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது. மிலிடோபோல் நகர்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன. நோவா பகுதியைக் கைப்பற்றி அங்கிருந்த ஹைட்ரோ எலக்ட்ரிக் நிலையத்தின் கட்டிடத்தில் ரஷ்ய கொடியை ஏற்றியது ரஷ்ய ராணுவம்

கேர்சம்
இந்நிலையில், உக்ரைனின் கேர்சன் என்ற பகுதியை தற்போது கைப்பற்றி உள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், கேர்சன் பகுதியில் உள்ள அரசு கட்டிடத்தில் ரஷிய தேசியக் கொடியை அந்நாட்டு ராணுவ வீரர்கள் ஏற்றியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கிவி மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகரை சுற்றி வளைக்கும் திட்டமாக இதை ரஷ்யா செயல்படுத்தி வருகிறது.
Recommended Video

அணு உலை
செர்னோபில் அணுமின் நிலையம் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது செர்னோபி. 1986ஆம் ஆண்டு செர்னோபில் அணுமின் நிலையத்தின் 4ஆவது அணுஉலை வெடித்துச் சிதறியதில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், அங்கிருந்து வெளியான கதிரியக்கத்தால் உக்ரைன் மக்களுக்கு மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அதுபோன்ற மோசமான செயலில் ரஷ்யா ஈடுபடாமல் இருக்க வேண்டும் என உலக நாடுகள் பயத்தில் உள்ளன.












Click it and Unblock the Notifications