ரஷ்யா பண்ற வேலையை பார்த்தீங்களா.. உக்ரைன் ராணுவத்தை குழப்ப.. தாத்தா காலத்து டெக்னிக்!
கீவ்: ரஷ்யா ராணுவ வீரர்கள் உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி செல்கின்றனர். இதற்காக உக்ரைன் ராணுவ வீரர்களின் யூனிபார்ம் அணிந்து மாறுவேடத்தில் அவர்கள் சென்று கொண்டுள்ளனர்.
உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ரஷ்யா-உக்ரைன் பிரச்னை போராக மாறியுள்ளது. ரஷ்யா, இன்று அதிகாலை 4 மணி முதல் உக்ரைன் மீது மீண்டும் குண்டுமழை பொழிய துவங்கியது. இதன்மூலம் 2வது நாள் போர் சூரிய உதயத்துக்கு முன்பே உதயமானது.
ரஷ்யாவின் முக்கிய இலக்காக உக்ரைன் தலைநகர் கிவ் தான் உள்ளது. இதனை கைப்பற்ற ரஷ்யா ராணுவம் விரைந்து செயல்பட்டு வருகிறது.

இரு படைகளுக்கும் சண்டை
இந்த இலக்கை எட்டும் நோக்கில் ரஷ்ய ராணுவ வீரர்கள் இன்று வடகிழக்கு, கிழக்கு பகுதியில் இருந்து கிவ் நகரை நோக்கி முன்னேறினர். அப்போது அவர்களுக்கும், உக்ரைன் படைக்கும் சண்டை நடந்தது. இதில் உக்ரைன் வீரர்களையும், அவர்களின் வாகனங்களையும் ரஷ்ய வீரர்கள் சிறைபிடித்தனர்.

யூனிபார்ம் மாற்றம்
அதன்பின் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் வீரர்களின் ராணுவ யூனிபார்மை அணிந்து கொண்டனர். மேலும் உக்ரைன் வீரர்களின் பீரங்கி வண்டிகளில் அவர்கள் முன்னேறி சென்றனர். இந்த வாகனத்தை பின்தொடர்ந்து ரஷ்ய ராணுவ லாரிகள் செல்கின்றன. இதுகுறித்து யூனியன் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதை உக்ரைன் ராணுவ அமைச்சர் உறுதி செய்துள்ளார். கார்கில் போரின்போது, பனி மூட்டத்தில் தெரியாமல் இருக்க பாகிஸ்தான் ராணுவத்தினர், வெள்ளை உடையை உடுத்தியபடி ஊடுருவினார்கள். ஆனாலும், இந்திய ராணுவம், அவர்களை வேட்டையாடியது நினைவிருக்கலாம்.

சரணடைந்தால் கைவிடுவோம்
இதற்கிடையே உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. இதுதொடர்பாக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லவ்ரோ கூறுகையில், ‛‛உக்ரைன் மக்களை அடக்குமுறையில் இருந்து விடுவிக்க ரஷ்யா விரும்புகிறது. உக்ரைன் படைகள் எங்களை எதிர்த்து போரிடாமல் சரண் அடைய வேண்டும். இது நடந்தால் போரை நிறுத்துவோம்'' என கூறியுள்ளார்.

திருப்பம்
இது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆனால் ரஷ்யாவின் இந்த வேண்டுகோளுக்கு உக்ரைனில் இருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை. முன்னதாக நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியபோது, ‛‛ஆயுதங்களை கீழே போட்டு எங்கள் வீரர்களை சரணடைய கூறுகிறார். ஒருபோதும் நாங்கள் ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம்'' என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications