உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்யுங்கள்.. மிலிட்டரி கணவனுக்கு ரஷ்ய பெண் "உத்தரவு"
கீவ்: ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்று வரும் சூழலில் போருக்கு சென்றுள்ள தனது
கணவனிடம், "உக்ரைன் பெண்களை பார்த்தால் பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும்"
என்று இளம்பெண் ஒருவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த பெண் உலக அளவில் சர்வதேச அளவில் 'தேடப்படும் நபர்' பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய இப்போர் தற்போது வரை நீடித்து வருகிறது.
இதில் இருதரப்பிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தொடக்கத்தில் ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது அமெரிக்கா உதவியால் உக்ரைன் உக்கிரமடைந்திருக்கிறது.
இதற்கிடையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோபைடனை நேரில் சந்தித்து உரையாற்றினார். 300 நாட்களுக்கும் மேல் எங்கேயும் போகாமல் உக்ரைனில் இருந்தவர் திடீரென அமெரிக்கா விஜயம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உக்ரைன்
இந்த சந்திப்பு நடந்த அடுத்த நாளில், போரை நிறுத்திக்கொள்ள யோசித்திருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் கூறியிருந்தார். ஏனெனில் ஜெலன்ஸ்கி, ஜோபைடன் சந்திப்பையடுத்து உக்ரைனுக்கு சுமார் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு ராணுவ உதவிகளை செய்வதாக அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அறிவித்தது. இது வெறும் சாம்பிள்தான் ஏனெனில், தற்போது வரை ரஷ்யா உக்ரைனுக்கு சுமார் ரூ.18 லட்சம் கோடி அளவுக்கு ராணுவ உதவிகளை செய்திருக்கிறது. ரஷ்யாவின் ராணுவ பட்ஜெட்டில் இது ஏறத்தாழ 28 சதவிகிதமாகும். இதெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் கடும் அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர்
இது தொடர்பாக ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆடியோவை பிரிட்டனின் LBC (Leading Britain's Conversation) ரேடியோ நிலையம்
ஒளிபரப்பியுள்ளது. அதாவது உக்ரைன் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தங்கள் நாட்டில் உள்ள ரஷ்ய படையினரின் செல்போன் அழைப்புகளை ஒட்டு கேட்டுள்ளனர்.
அப்படிதான் இந்த ஆடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆடியோவில் ரஷ்யாவிலிருந்து பேசியுள்ள பெண் ஓல்கா பைகோவ்ஸ்கயா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இப்பெண்ணின் கணவர் ரோமன் பைகோவ்ஸ்கி உக்ரைனில் ரஷ்யாவுக்காக போரிட்டுக்கொண்டிருக்கிறார்.

உரையாடல்
கணவருக்கு போன் செய்து அப்பெண் பேசியதாவது, "போரிடும் இடத்தில் உக்ரைன் பெண்களை பார்த்தால் பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும். ஆனால் இது குறித்து
என்னிடம் எதுவும் கூறக்கூடாது" என்று கூறியுள்ளார். உடனே குறுக்கிட்டு பேசி கணவர் ரோமன் பைகோவ்ஸ்கி, "உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டுமா? அது என்னால் முடியுமா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு
பதிலளித்த அப்பெண், "ஆமாம். உங்களால் முடியும். நீங்கள் செய்யுங்கள்.
அதற்கான அனுமதியை நான் கொடுக்கிறேன். ஆனால் சேஃப்டியாக அதை செய்யுங்கள்" என்று கூறியுள்ளார். பின்னர் இருவரும் மாறி மாறி சிரிக்கின்றனர்.

வாண்டட் லிஸ்ட்
இந்த ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து, இந்த பெண்ணை
'வாண்டட்' பட்டியலில் உக்ரைன் அதிகாரிகள் சேர்த்துள்ளனர். இதன் மூலம் இப்பெண்ணின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படும். அதேபோல இப்பெண் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தையும் அதிகாரிகள் வெளியிடப்பட்டுள்ளனர்.
இப்பெண்ணின் கணவரின் சமூக வலைத்தள கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications