ரஷ்யாவின் புரவெஸ்ட்னிக்.. உலகத்தில் எந்த நாட்டாலும் ஒன்றுமே செய்ய முடியாது.. நவீன அணு ஆயுதம் எப்படி?
மாஸ்கோ: வரும் காலத்தில் பூமியில் போர் நடப்பதைவிட வானத்தில் தான் போரே நடக்க போகிறது. ஒவ்வொரு நாடுகளும் ஏவுகணைகளுக்கும், டிரோன்களுக்கும் கோடிகளை கொட்டுகின்றன. எதிரிகளின் நாட்டுக்கே செல்லாமல், எதிரிகளின் இலக்குகளை தாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன. அந்த வகையில் ரஷ்யா தயாரித்து சோதனை செய்த புரவேஸ்ட்னிக்கை உலகின் உலகத்தில் எந்த நாட்டாலும் ஒன்றுமே செய்ய முடியாது. அணு ஆயுதமான அது எப்படி செயல்படும் என்பதை பார்ப்போம்.
ரஷ்யாவை பொறுத்தவரை அமெரிக்காவை போல் உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. உலக நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. ரஷ்யாவை தவிர உலகின் எந்த நாட்டுடனும் அமெரிக்கா எளிதாக மோதும். அதேநேரம் ரஷ்யா உடன் மட்டும் நேரடியாக மோதுவது இல்லை ..

ரஷ்யாவை பொறுத்தவரை அமெரிக்கா உடன் நெருக்கம் காட்டிய உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்தது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தி கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இதுவரை உலகமே காணாத ஒரு குரூஸ் வகை ஏவுகணை சோதனையை ரஷ்யா நடத்தி வெற்றி கண்டுள்ளது. அமெரிக்கா உள்பட உலகின் எந்த நாட்டிடமும் இல்லாத ஒரு ஆயுதமாக பார்க்கப்படுகிறது. அந்த ஆயுதத்தின் பெயர் தான் புரவேஸ்ட்னிக். வானமே விழும் என்ற பொருளில் அழைக்கப்படும் புரவேஸ்ட்னிக் எப்படி செயல்படும் என்பதை பார்ப்போம்.
உலகம் முழுக்க அண்மை காலம் வரை பாலிஸ்டிக் ஏவுகணைகள் தான் இருந்து வந்தன. தற்போது அதற்கு பதிலாக குரூஸ் ஏவுகணைகளை எல்லா நாடுகளும் பயன்படுத்த தொடங்கிவிட்டன. பாலிஸ்டிக் ஏவுகணை என்பது பூமியில் இருந்து விண்ணில் நேராக சென்று பின்னர் வளைந்து சென்று இலக்கை நோக்கி விழும் ஏவுகணையாகும். ஆனால் குரூஸ் ஏவுகணைகள், விமானம் போல் பறந்து சென்று இலக்கினை தாக்கும் இயல்பு உடையது.
இந்த குரூஸ் ஏவுகணைகள் எல்லாவற்றிற்கும் எவ்வளவு தூரம் சென்று தாக்கும் என்ற ஒரு தூர இலக்குடன் செயல்படும். அமெரிக்காவின் டோமாஹாக், சீனாவின் சிஜே-10 ஆகியவை 2,500 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று இலக்கை தாக்கும். இந்தியாவின் நிர்பாய் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்கும். ஆனால் ரஷியாவின் புரவேஸ்ட்னிக், தூரம் என்பதே கிடையாது. அது எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சென்று இலக்கை தாக்கும் இயல்புடையது என்கிறார்கள்.
ஏவுகணைகளின் என்ஜின் திறனை வைத்து தூரம் முடிவு செய்யப்படும் நிலையில், புரவெஸ்ட்னிக், என்ஜின்களுக்கு பதிலாக சிறிய அணு உலையை பயன்படுத்துகிறதாம். அதனால் எவ்வளவு தூரத்திற்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியும் என்கிறார்கள். உலகின் எந்த பகுதியையும், இனி ரஷியாவால் தனது நாட்டில் இருந்தே குறிவைத்து அழிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த புரவேஸ்ட்னிக் அணுக்களால் செயல்படுகிறது. இது கொண்டு செல்லும் ஆயுதமும் என்பது வெறும் குண்டுகள் அல்ல.. அணு ஆயுத குண்டுகள் ஆகும். இதனால் எனவே புரவெஸ்ட்னிக் மிக மோசமான அழிவை ஏற்படுத்தும் வல்லமை உடையதாகும்
புரவெஸ்ட்னிக்கை பொறுத்தவரை தாழ்வாக பறந்து செல்லுமாம். உலகில் உள்ள சக்தி வாய்ந்த ரேடார் கண்களில் மண்ணை தூவி எங்கும், எதிலும் சிக்காமல் சென்று இலக்கை எட்டி விடும். உலகின் எந்த நாட்டின் வான் பாதுகாப்பு கவசமும் அதனை தடுக்க இயலாது என்கிறார்கள்.
இந்த புரவேஸ்ட்னிக் ஏவுகணையின் முதல் சோதனையை ரஷியா 2018-ம் ஆண்டு நடத்தி இருக்கிறது. ஆனால் அப்போது தோல்வியில் முடிந்தது. பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு, இப்போது வென்றுள்ளது. விரைவில் ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ள புரவேஸ்ட்னிக் ஏவுகணையை கடல், கடலுக்குள் உள்ள நீர்மூழ்கி கப்பல், நிலம், நிலத்தில் செல்லும் எந்த வாகனங்கள் மற்றும் பறக்கும் விமானம் என எதில் இருந்து வேண்டுமானாலும் எளிதாக ஏவ முடியும் என்கிறார்கள். அதேபோல் எந்த நேரத்திலும் இலக்கை மாற்றி பயணிக்க முடியுமாம்.












Click it and Unblock the Notifications