34 வருடங்களுக்கு பின்.. ரஷ்யா கையில் எடுக்கும் அணு ஆயுத டெஸ்ட்.. உலக அரசியலே திரும்பி பார்க்குதே
மாஸ்கோ: சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு நிறுத்தப்பட்ட அணு ஆயுதச் சோதனைகளை மீண்டும் தொடங்கும் திட்டத்தில் இருப்பதாக ரஷ்யா வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன. 34 ஆண்டுகளுக்கு பின் அந்த நாடு மீண்டும் அணு ஆயுத சோதனை செய்யலாம் என்று கூறப்படுகிறது.
ரஷ்யாவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவின் அறிக்கையில் அமெரிக்காவின் செயல்பாடுகள் காரணமாக பதட்டங்கள் அதிகரித்துள்ளன. உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் உதவிகளை ரஷ்யா ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் காரணமாக அணு ஆயுத போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. அதனால் இரு நாடுகளும் அணுகுண்டு சோதனை நடத்துவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. இது உலகளாவிய உறுதியற்ற தன்மையை அதிகரிக்க வழிவகுக்கும்.

அமெரிக்காவின் செயல்பாடுகளை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அணு ஆயுதப் போட்டிக்கான சாத்தியக்கூறுகள் தெரிய தொடங்கி உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் ரஷ்யா தனது அணு சக்தியை கவனமாக உறுதியாக வைத்திருக்க வேண்டும். ரஷ்யா அணு சக்தி அமைப்புகளை தீவிரமாக பலப்படுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்று ரஷ்யாவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி ரியாப்கோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா பிளான்: ஏற்கனவே 16,000 மைல் வேகத்தில் செல்லும் சாத்தான் 2 ஏவுகணைகளை போருக்கு தயார் செய்யும்படி ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சாத்தான் 2 ஏவுகணைகள் அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது ஆகும்.
அணுசக்தி திறன் கொண்ட RS-28 சர்மட் என்ற ஏவுகணைதான் சாத்தான் ஏவுகணை என்று அழைக்கப்படுகிறது. இது "உலகின் கொடிய ஆயுதம்" என்று அழைக்கப்படுகிறது. தற்போது உலகில் ஆக்டிவ்வாக இருப்பதிலேயே மோசமான போர் ஆயுதம் இந்த சாத்தான் 2 ஏவுகணைதான்.
திரவ எரிபொருளில் இயங்க கூடிய ஏவுகணை ஆகும் இது. இந்த ஏவுகணை தடுக்க முடியாத 15,880mph வேகத்தில் செல்ல கூடியது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பு ஆகும் இது. 14-அடுக்கு கோபுரம் போல உயரமானது இது. மொத்தமாக 208 டன் எடை கொண்டது இது. மொத்தமாக 10 அணு ஆயுதங்களை தலா 7 கிலோடன் எடை கொண்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது இது.
அணு ஆயுத போர்: சமீபத்தில்தான் ரஷ்யா உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் தாண்டி செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை அல்லது ICBM ஏவுகணைகளை ஏவி தாக்கி உள்ளது. இது அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.
இதை தேவைக்கு ஏற்றபடி பயன்படுத்திக்கொள்ளலாம். தேவையான நேரத்தில் அணு குண்டை வைத்து ஏவலாம். இல்லையென்றால் அணுகுண்டு இல்லாமல் ஏவ முடியும். இதை போர்க்கப்பலில் இருந்தும் கூட ஏவ முடியும். பொதுவாக இந்த ஏவுகணையை ஒரு நாடு பெரிய போரில் மட்டுமே பயன்படுத்தும்.
அல்லது பெரிய சோதனைகளை செய்தால் பயன்படுத்தும். அணு குண்டு சோதனைகளை மேற்கொள்ள இது போன்ற கண்டம் தாண்டி செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தும். இப்படிப்பட்ட ஏவுகணையை உக்ரைன் மீது ரஷ்யா பயன்படுத்தி உள்ளது. இதனால் எங்கே ரஷ்யா அடுத்து அணு ஆயுத தாக்குதல் நடத்த திட்டமிடுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது போக ரஷ்ய அதிபர் புடின்.. ரஷ்யாவில் இருக்கும் அணு ஆயுத ஷெல்டர்களை தயார் செய்யும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக அணு ஆயுத ஷெல்டர்கள்.. அணு ஆயுத தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் பங்கர்கள் ஆகும்.
முக்கிய தலைவர்கள்.. பெருமளவிலான மக்களை பாதுகாக்கும் விதமாக பங்கர்கள் அமைக்கப்படும். அணு கதிர்வீச்சு பாதிக்காத வகையில் பாதுகாப்பாக பல மீட்டர் அகலமான சுவர்கள் பூமிக்கு அடியில் சுரங்கமாக அமைக்கப்பட்டு இருக்கும். இது போன்று உலகம் முழுக்கவே பங்கர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யாவில் இருக்கும் அணு ஆயுத ஷெல்டர்களை தயார் செய்யும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications