மேற்குலக நாடுகள் புறக்கணித்தன.. ரஷ்யாதான் உதவியது! ஓப்பனாக பேசிய ஜெய்சங்கர்! கவனிக்கும் உலக நாடுகள்
கான்பெரா: ஆஸ்திரேலியாவில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நேரடியாகவே மேற்குலக நாடுகளுக்கு எதிராக சில கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இப்போது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். நியூசிலாந்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், அப்போது ஆஸ்திரேலியா சென்று உள்ளார்.
அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெய்சங்கர், ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வோங்கை சந்தித்து உரையாடினார். அதன் பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

ஜெய்சங்கர்
அப்போது ஜெய்சங்கர் மேற்குலக நாடுகளுக்கு எதிராக வெளிப்படையாகவே சில கருத்துகளைத் தெரிவித்தார். கடந்த காலங்களில் மேற்குலக நாடுகள் இந்தியாவுக்கு ஆயுதங்களை அளிக்காமல் வேறு ஒரு நாட்டிற்கு ஆயுதம் அளித்தாகவும் இதனால் சோவியத் மற்றும் ரஷ்யாவின் ஆயுதங்களின் இந்தியாவிடம் கணிசமான இருப்பு உள்ளது என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். கடந்த காலங்களில் மேற்குலக நாடுகள் இந்தியாவுக்குப் பதில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயுதங்கள்
ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், "இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே நீண்டகால உறவு உள்ளது. அது கடந்த காலங்களில் இந்தியாவுக்கு பல்வேறு நலன்களைக் கொடுத்து உள்ளது. எங்களிடம் சோவியத் மற்றும் ரஷ்யாவின் ஆயுதங்கள் கணிசமான அளவுக்கு இருப்பு உள்ளது. பல்வேறு காரணங்களால் எங்களிடம் இருந்து ரஷ்ய ஆயுதங்கள் இருப்பு காலப்போக்கில் அதிகரித்தது.

மேற்குலக நாடுகள்
அதேபோல பல ஆண்டுகளாக மேற்குலக நாடுகள் இந்தியாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை. மாறாக எங்களுக்கு அருகே உள்ள ராணுவ ஆட்சி கொண்ட நாட்டுக்கு மேற்குலகம் ஆயுதங்களை அனுப்பியது" என்றார். பணிப்போர் காலத்தில் மேற்குலக நாடுகள் பாகிஸ்தானிடமே நெருக்கம் காட்டியது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் சுதந்திரம் பெற்றதில் இருந்து பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் அங்கு ராணுவ ஆட்சியை நடைபெற்றது.

சர்வதேச அரசியல்
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து பெறும் ஆயுதங்களை இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெய்சங்கர், "சர்வதேச அரசியலில் நம்மிடம் இருக்கும் விஷயங்களை வைத்தே முடிவு எடுப்போம். அது நமது எதிர்கால நலன்கள் மற்றும் தற்போதைய நிலை என இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எல்லா சூழலைப் போல இந்த ராணுவ மோதலில் இருந்தும் நாம் கற்ற கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளது. அதன் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும்" என்றார்.

ரஷ்ய ஆயுதங்கள்
ஜெய்சங்கர் இந்தியா விரும்பிய நாடுகளிடம் இருந்து ஆயுதங்களைப் பெறும் என்று கூறுவது இது முதல் முறை இல்லை. முன்னதாக கடந்த மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், "சர்வதேச நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை வழங்கும்போது, தேசிய நலனை அடிப்படையாக வைத்த இந்தியா முடிவு செய்யும்" என்று கூறி இருந்தார்.

அதிநவீன எஸ்-400
இந்தியா அதிக அளவில் ராணுவத் தளவாடங்களை வாங்கும் நாடாக ரஷ்யா இருந்து வருகிறது. இப்போது ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடை காரணமாக மாற்றுக் கட்டண வழிமுறைகள் குறித்து ஆலோசித்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு தான், ரஷ்யா தனது அதிநவீன நீண்ட தூர வான்வழி ஏவுகணையான S-400ஐ இந்தியாவிற்கு வழங்கி இருந்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications