சல்மான் கான் பேச்சால் டென்ஷன் ஆன பாகிஸ்தான்.. பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து அடாவடி.. என்ன நடந்தது
இஸ்லாமாபாத்: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை பயங்கரவாதிகள் லிஸ்டில் பாகிஸ்தான் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (1997) 4-வது அட்டவணையின் கீழ் சல்மான் கானை பாகிஸ்தான் சேர்த்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சவுதி அரேபியால் சல்மான் கான் பேசிய பேச்சினால் டென்ஷன் ஆன பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் சல்மான் கான். தயாரிப்பாளர் மற்றும் சமூக சேவகரும் கூட. பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். சமூக நலப்பணிகளிலும் சல்மான் கான் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகர் சல்மான் கானை பயங்கரவாதிகள் பட்டியலில் பாகிஸ்தான் சேர்த்துள்ளது.

பாக். பயங்கரவாதிகள் பட்டியலில் சல்மான் கான்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (1997) நான்காவது அட்டவணையின் கீழ் சல்மான் கானை பாகிஸ்தான் சேர்த்து இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கும் சந்தேக நபர்கள் இந்த லிஸ்டில் வைக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
அதாவது, பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், இந்த லிஸ்டில் இடம் பெற்றவர்களை தீவிரமாக கண்காணிப்பது, அவர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
எதற்காக பாகிஸ்தான் இப்படி செய்தது?
சவூதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் சல்மான் கான் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான், "இந்தி திரைப்படங்கள் சவூதியில் திரையிட்டால் பெரிய அளவில் ஹிட் ஆகும். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களும் பல கோடிகள் வசூல் செய்கின்றன. ஏனெனில், இங்கே பல நாடுகளில் இருந்து மக்கள் பணியாற்றுகிறார்கள்.
பலோசிஸ்தானில் இருந்தும், ஆப்கானிஸ்தானில் இருந்தும் பாகிஸ்தானில் இருந்து பலர் இங்கே இருக்கிறார்கள்" என்றார். சல்மான் கானின் இந்த பேச்சே பாகிஸ்தான் கோபம் அடைய காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே பலோசிஸ்தானில் தனி நாடு கோரி போராட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சல்மான் கானின் பேச்சால் எரிச்சல் அடைந்த பாகிஸ்தான், சல்மான் கானை பயங்கரவாதிகள் லிஸ்டில் சேர்த்து இருப்பதாக தெரிகிறது.
பலோசிஸ்தானின் தனிநாடு
சல்மானின் கருத்து பாகிஸ்தானின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாக உள்ளதாக கருதிய பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இருந்தபோதிலும் பலோசிஸ்தானின் தனிநாடு கோரி போராடி வரும் தலைவர்கள், சல்மான் கானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தங்களின் போராட்டத்திற்கு அடையாள ஒப்புதல் போல சல்மான் கானின் கருத்து அமைந்துள்ளதாக பலோசிஸ்தான் தனிநாடு கோரும் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக பலோசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரி போராடி வரும் தலைவர்களில் ஒருவரான மிர் யார் பலோச் கூறியதாவது: "சல்மான் கானின் வார்த்தைகள் பலோசிஸ்தானில் வசிக்கும் ஆறு கோடி மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. பல நாடுகள் தயங்கிய ஒன்றை சல்மான் கான் செய்து இருக்கிறார். இது மிகவும் சக்திவாய்ந்த செயல்" என்று தெரிவித்துள்ளார்.
வறுமை கோட்டுக்கு கீழே 70 சதவீத மக்கள்
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்றாக பலோசிஸ்தான் உள்ளது. பாகிஸ்தான் நிலப்பரப்பில் 46 சதவீதம் இந்த மாகாணத்தில்தான் உள்ளது. எனினும் 6 சதவீத நிலப்பரப்பில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள். இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாக இருந்தாலும் பாகிஸ்தானில் மிகவும் வறுமை மிக்க பகுதிகளில் ஒன்றாகவே இது உள்ளது. இங்கு வசிக்கும் 70 சதவீதத்திற்கு மேலான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழேயே வசிக்கிறார்கள்.
பொருளாதார ரீதியாக ஆட்சியாளர்களால் அலட்சியப்படுத்துதல், ராணுவ கட்டுப்பாடுகள், சுரண்டல் உள்ளிட்டவையால் கடுமையாக இந்த மாகாண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அரசுக்கு எதிரான அவர்களின் கோபத்திற்கும் அதுவே காரணமாகும். சல்மான் கான் மேற்கூறிய விவகாரம் தொடர்பாக தனது கருத்து எதுவும் தற்போது வரை தெரிவிக்கவில்லை.
உறுதியான தகவல் இல்லை
சல்மான் கானை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்படுகிறது. இதற்கான ஆவணம் என ஒன்றும் சேர்த்து இந்த தகவல் பரவி வருகிறது. எனினும், இதன் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை.
பாகிஸ்தான் அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக சல்மான் கான் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிட்டது போல தெரியவில்லை. அதேபோல அந்நாட்டின் முதன்மையான ஊடகங்களிலும் இது பற்றிய செய்தி எதுவும் இல்லை. எனவே, சல்மான் கானுக்கு எதிரான இப்படியாக ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பதை உறுதிப்படுத்தி கூறமுடியவில்லை.
-
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்! -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications