‘ஆப்பிளை’க் காப்பியடித்த சாம்சங்... 290 மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்க அமெரிக்க கோர்ட் உத்தரவு
சான் ஜோஸ்: ஆப்பிள் மொபைலில் உள்ள வசதிகளைக் காப்பியடித்து தங்களது சாம்சங் மொபைலில் பயன்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சாம்சங் நிறுவம் 290 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க அமெரிக்கக் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மனிதர்களின் ஆறாம் விரலாய் மாறிப் போன் மொபைல் போன்களை உற்பத்திச் செய்வதில், முண்ணனி நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
தங்களது வாடிக்கையாளர்களைத் திருப்தி படுத்த புதுப் புது நுட்பங்களை இரண்டு நிறுவனங்களுமே அறிமுகப் படுத்தி வருகின்றன. இந்நிலையில், தங்கள் மொபைலின் சிறப்பம்சங்களை சாம்சங் காப்பியடித்து தனது மொபைலில் பயன் படுத்துவதாக வழக்கு தொடர்ந்தது ஆப்பிள் நிறுவனம்.

வழக்கு....
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கலிபோர்னியா மாகாணத்தின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காப்பியடித்தது....
அதில், ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்ற ஐ-போன் மற்றும் ஐ-பாடில் உள்ள அம்சங்களை சாம்சங் நிறுவனம் காப்பியடித்து தனது மொபைலில் அறிமுகப் படுத்தியுள்ளது எனக் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.

நஷ்ட ஈடு....
வழக்கை விசாரித்த நீதிபதி 1.05 பில்லியன் டாலர் ஆப்பிள் நிறுவனத்திற்கு அளிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். பின்னர், மீண்டும் மறுவிசாரணை செய்யப்பட்டு 450 மில்லியன் டாலருக்கு நஷ்டஈடு அளிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேல்முறையீடு...
அதனைத் தொடர்ந்து, மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டதன் விளைவாக சமீபத்திய விசாரணையின் முடிவில் சாம்சங் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்திற்கு 290 மில்லியன் டாலர் நஷ்டஈடு அளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மறுவிசாரணை....
ஆனபோதும், இத்தீர்ப்பினையும் எதிர்த்து மறுவிசாரணை கோரி சாம்சங் மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது

13 மாதிரிகள்....
தற்போது வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பானது ஆப்பிளின் காப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட சாம்சங்கின் 26 மாதிரிகளில் 13-ஐ உள்ளடக்கியது.

மற்றொரு வழக்கு....
இந்நிலையில், விற்பனை சந்தையில் வெளியிடப்பட்டுள்ள சாம்சங்கின் தற்போதைய தொழில்நுட்ப சாதனங்கள் ஆப்பிளின் தொழில்நுட்பத்தை ஒத்துள்ளது என்ற மற்றொரு குற்றச்சாட்டிற்கான விசாரணை வரும் மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications